ஏழைகளுக்கு எந்த நாடும் சொந்தமில்லை-பர்க்கா தத்

இந்த கட்டுரையை தேசத்தின் குரலுக்காக மொழிப்பெயர்த்தவர் போனிபஸ்.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், டெல்லி மற்றும் ஹரியானா போன்ற பல்வேறு மாநிலங்கள் வழியாக நான் இப்போது சாலையில் பயணித்துள்ள, கிட்டத்தட்ட 50 நாட்களில் இருந்து ஒரு புரிதல் என்னவென்றால், அது இதுதான்: இந்தியாவில் 4.5 கோடிக்கும் அதிகமானோரை குடிமக்களே அல்லாதது போல நடத்தி இருக்கின்றோம்.
இந்த தொற்றுநோயைப் பற்றிய செய்தி அறிக்கை செய்த முதல் நாளிலிருந்தே, இந்த ஊரடங்கில் நாம் ஏழ்மையான, மிகவும் ஓரங்கட்டப்பட்ட மக்கள் மீது ஒரு பெரிய அளவிலான உணர்வற்ற தன்மையுடன் நடந்து கொண்டதாகவே உணர்கிறேன். அதுவும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் மிகவும் கடினத்தன்மையுடன் நடந்துகொண்டதாகவே காண்கிறேன்.
ஆரம்பத்தில், சமூக பூட்டுதல்(லாஃடௌன்) தொழிலாளர்களின் பெருமளவிலான வெளியேற்றத்தை எதிர்பார்க்கத் தவறிவிட்டது. அவர்கள் இருக்கும் இடத்திலேயே தங்குவதற்கு அவர்களுக்கு போதுமான சமூக அல்லது பொருளாதார பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை, அவர்கள் வெளியேற முயன்றபோது, ​​ஒரே நேரத்தில், நாம் அவர்களைக் குற்றம் சாட்டினோம், வறுமை அவர்களின் குற்றம் போல.

சாலையில் குடியேறியவர்கள் யாரும் இல்லை என்று மார்ச் 31 அன்று அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் கூறியது. அதன்பின் இருபத்தி இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஒரு வார காலத்திற்குள், நான்கு தேசிய நெடுஞ்சாலைகளில், நாட்டின் நான்கு வெவ்வேறு பகுதிகளில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் சாலையில் நடந்து செல்வதை காணமுடிந்தது. சில குழந்தைகள் வெறுங்காலுடன் நடக்கிறார்கள். பெண்கள் தங்கள் தலையில் சாக்குகளில் உருட்டப்பட்ட உடைகள் மற்றும் பாத்திரங்களை சுமந்து செல்கிறார்கள், பிரபஞ்சத்தின் சுமை அவர்கள் மீது இருப்பதைப் போல. மேலும், குழுவில் உள்ள குழந்தைகளை தங்கள் தோள்களில் சுமக்க ஆண்கள் திருப்பங்களை எடுத்துக்கொள்கிறார்கள். உருளைக்கிழங்கு மற்றும் சீரக பண்ணைகள், போர்வை நெசவாளர்கள் மற்றும் தொழிற்சாலை துப்புரவாளர்கள் ஆகிய தொழிலாளர்களை நான் சந்தித்தேன். அவர்கள் அனைவரும் என்னிடம் ஒரே விஷயத்தைச் பகிர்ந்துக்கொண்டது என்னவென்றால்: “நாங்கள் நகரவில்லை என்றால் நாங்கள் பட்டினியாக கிடந்து இறந்திருப்போம்”என்பதே அது.

இந்த வாரம், ஹரியானாவின் பானிபட்டிலிருந்து பீகாரில் அவுரங்காபாத் வரை 1,100 கிலோமீட்டர் தூரத்தை மிதிவண்டியில் செல்ல முயன்ற ஒரு குழுவினரை நான் சந்தித்தேன். “எங்கள் லாலா (முதலாளி) எங்களுக்கு பைசா (பணம்) கொடுக்க மறுத்துவிட்டார்,” என்று சொன்னார்கள், திறந்த வானத்தின் கீழ், சாலையில் தங்க காவல்துறையினர் அனுமதித்தபோதும், அவர்கள் இரவுகளை எப்படி கழித்தார்கள் என்பதைப் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் பிஸ்கட் மற்றும் தண்ணீருடன் வீட்டை விட்டு வெளியேறினர், ஆனால் அது தீர்ந்துவிட்டது. அடுத்த உணவு எங்கே வரும் என்று அவர்களுக்கு தெரியாது. “நாங்கள் பசியால் இறந்திருப்போம். தொழிற்சாலை மூடப்பட்ட பிறகு எங்கள் லாலா எங்களுக்கு ஒரு நாள் பணம் கூட கொடுக்கவில்லை. ”
மத்திய பிரதேசத்தின் மொரேனாவில், ரன்வீர் சிங்கின் குடும்பத்தினருடன் சந்தித்தேன். டெல்லியில் உள்ள ஒரு சிறிய உணவகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தவர். நடைப்பயணமாகவே வீட்டிற்கு வர எத்தனித்தவரின் மார்பு இறுக்கத் தொடங்கியபோது 250 கிலோமீட்டர் கடந்து கொண்டிருந்தார். ஆக்ராவில் உள்ள ரயில் நிலையத்தில் இரவை கழிக்க முடிவு செய்தார். அவரது குடும்பத்தினருக்கான கடைசி தொலைபேசி அழைப்பு: “நீங்கள் வந்து என்னைப் அழைத்து போக முடிந்தால், தயவுசெய்து வாருங்கள்.” குடும்பத்தினர் தங்கள் வாகனத்தை வெளியே எடுக்க ஊரடங்கு உத்தரவு(Vehicle pass) ஏற்பாடு செய்ய முடிந்த நேரத்தில், அவர் இறந்துவிட்டார்.
அவரது கிராமத்தில், ஒரு சகோதரி, அவரது மனைவி மற்றும் மூன்று இளம் மகள்கள், போலியோ நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை உட்பட, நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்குகிறார்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினையை நாங்கள் விவாதிக்கும்போது, ​​அதை ஒரு சுருக்கமாகக் கருதுகிறோம்; போராட்டம் மற்றும் சோகத்தின் சதை மற்றும் இரத்தக் கதைகள் இங்கே உள்ளன என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

உலகெங்கிலும் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர திட்டமிடப்பட்டு வருகின்றன, சிக்கித் தவிக்கும் மாணவர்களுக்கு பேருந்துகள் மீட்க ஆயத்தமாகிறது, ஆனால் கோடிக்கணக்கான நமது ஏழைகளைப் பற்றி யாரும் பேசவில்லை.,
நம் குடிமக்கள் சாலைகளில் நடந்து செல்வதை கண்டும் காணாததை போல் இருந்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் என்னை குற்றவுணர்வு அழுத்துகிறது.

தாங்க முடியாத அளவிற்கு அழுத்துகிறது.

பர்க்கா தத்.