ஏன் தமிழக மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்?

தமிழக மக்கள் ஏன் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்? ஆனால் ஏன் மாற்றம் வரவில்லை?
தமிழக அரசியலில் முன்பெல்லாம்  திராவிட இயக்க அரசியல் தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் பல இருந்தாலும் பொதுதளங்களில் பேசும்போது  மரியாதையுடனும், நட்புணர்வுடனும், மற்றும் நாகரிகத்துடனுமே நடந்து வந்திருக்கிறார்கள் . இதனால் தமிழக அரசியல் ஒரு கண்ணியமான  பாதையிலேயே பயணித்து வந்திருக்கிறது என்றே சொல்லலாம்.
இப்படி பட்ட அரசியல் நாகரீகம்தான் இரண்டு திராவிட கட்சிகளின் வெற்றிக்கும்  முக்கியமான காரணங்களாக கூட இருந்திருக்கலாம்.

ஆனால் இப்போதய திராவிட கட்சிகளின் நிலை எப்படி இருக்கிறது என்பதை விளக்க தேவை இல்லை. மக்கள் மட்டுமல்ல அரசியல் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களிடையே ஒருவிதமான அச்சத்தையே ஏற்படுத்துகிறது. இந்த அரசியல்வாதிகளின் வருமானம் பல மடங்கு அதிகரித்துக்கொண்டே போகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் நடிகர்களும் தங்கள் வருமானத்தை தற்காத்துக்கொள்ளவோ அல்லது மக்களிடத்தில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தியோ அரசியலில் குதிக்கிறார்கள். ஆனால் அவர்களின் கனவு முதலமைச்சர் நாற்காலியில் அமர வேண்டும் என்பதே. மக்களோடு மக்களாக செயல்பட தகுதியில்லாத இவர்களை மக்கள்தான்  புறக்கணிக்க வேண்டும்.

மக்களோடு மக்களாக இணைந்து செயல்படாத எந்த கட்சிகளும் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க வாய்ப்புகள் இல்லை. இதை எப்பொழுது இந்த மக்கள் புரிந்து கொள்கிறார்களோ அன்றுதான் தமிழகத்திற்கு விடிவுகாலம். இன்று பல இளைஞர்கள் பல கட்சிகளை ஆரம்பித்து இருக்கிறார்கள். ஆனால் மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என்றால் எத்தனை நல்ல கட்சிகள் வந்தாலும் வெற்றி என்பது எட்டாக்கனியாகத்தான் இருக்கும்.

இன்று காவல்துறை, நீதித்துறை மற்றும் அரசுதுறைகள் ஆளும்வர்க்கத்திடம் அடிமைப்பட்டு அவர்கள் சொல்லும் செயல்களுக்கு தலையாட்டி பொம்மை போல செயல்பட்டு வருகிறது. இது இப்படியே போனால் சாதாரனமக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். இதை தடுத்தாக வேண்டும் அல்லது மாற்றியாக வேண்டும். அதற்கு  மாணவர்கள், இளைஞர்கள், சமூக செயல்பாட்டாளர்களை ஒன்று சேர்த்து மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாற்றம் வர வேண்டும் என்று சொல்லும் மக்கள்தான்  பரிதாபப்பட்டு இவர்களுக்கே மாற்றி மாற்றி ஓட்டு போடுகிறார்கள்… இப்படி இருந்தால் எப்படி மாற்றம் வரும்?
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

நன்றி : ஜெய சேகர் கருங்கல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here