
எட்டு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்னும் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளது எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு.சரியாக தேர்தலுக்கு முன்னர் தீர்ப்பு வரும்போதே இது தேர்தல் நாடகம் என்று சொல்லியிருந்தோம்.இப்போது தேர்தல் முடிவுகள் வந்து சில நாட்களே ஆனநிலையில் தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க அவசர அவசரமாக தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்து தாங்கள் எப்பொழுதும் மக்கள் விரோத அரசுதான் என்பதை மற்றுமொரு முறை நிருபித்துள்ளது எடப்பாடி அரசு.
அரசின் இந்த முடிவை எதிர்த்து திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.இந்த திட்டம் நிறைவேறினால் காஞ்சிபுரம்,திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்கள் வழியாக செல்லும் இந்த சாலை பெரும்பான்மையான ஏரி, குளங்கள் ,நீர்நிலைகள், காடுகளை அழித்து சுற்றுபுறச்சூழலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையால் மக்கள் அனைவரும் இந்த திட்டத்தால் ஏற்படப்போகும் பாதிப்பை உணர்ந்து போராடும் மக்களுடன் கரம் கோர்க்க வேண்டும்.