எட்டுவழிச்சாலையை எதிர்த்து விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம்.

16.06.2019.
காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொருக்கந்தாங்கல் கிராமத்தை சார்ந்த விவசாயிகள் எட்டுவழிச்சாலையை எதிர்த்து அவர்களின் விவசாய நிலத்தில் இறங்கி போராடினர்.

கொருக்கந்தாங்கல் கிராமத்தில் 20 க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களும் நீர்நிலைகளான கிணறுகள், வாய்க்கால்கள் ,நீர்வழித்தடங்கள் போன்றவைகளும் பாதிக்கப்படுகின்றன.

யாரையும் எதிர்பார்க்காமல் தங்களுடைய உழைப்பால் மட்டுமே வாழ்ந்து வருவதற்கு தங்களுடைய நிலங்கள்தான் வாழ்வாதாரத்திற்கான ஒரே வழியாக இருந்து வருகிறது.அதையும் இழந்து விட்டால் நாங்கள் கூலித்தொழில்தான் செய்ய வேண்டும்.எங்களை போன்ற விவசாயிகளின் நிலங்கள் பறிப்பதில் இந்த அரசு குறியாக இருக்கிறது.தேர்தல் சமயத்தில் நீதிமன்ற தீர்ப்பை மதிப்பது போல நடித்தார்கள் .தேர்தல் முடிந்தவுடனே நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறார்கள்.

கடந்த தேர்தலில் அ.தி.முக அரசு படுதோல்வி அடைந்தாலும் அதற்கு புத்தி வரவில்லை.அடுத்த தேர்தலிலும் இந்த அரசை வீழ்த்த எங்கள் கிராமத்திலும் ,அக்கம்பக்கம் உள்ள கிராமங்களிலும் பணியாற்றுவோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

எங்களுக்கு எங்கள் விவசாய நிலத்தை விட்டால் பிழைப்புக்கு வேறு வழியில்லை.அதனால் இந்த திட்டத்தை எங்கள் உயிர் இருக்கும் வரை எதிர்த்து போராடுவோம்.பக்கத்தில் உள்ள கிராம மக்களோடும் பேசி வருகிறோம். அவர்களையும் இணைத்துக்கொண்டு இந்த போராட்டத்தை இன்னும் தீவிரமாக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம் “என ஒரு விவசாயி தெரிவித்தார்.

நமது தமிழ்நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தையும் உயிர்நாடியான நீராதாரங்களையும் அழித்து வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் இந்த மாநில ,மத்திய அரசுகள் நடத்தும் அழிவின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்படாமல் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்ப போவதில்லை.

இந்த போராட்டம் எங்கோ நடக்கிறது,யாருக்காகவோ நடக்கிறது என்று அலட்சியமாக இருங்கள், இன்று தண்ணீருக்கு திண்டாடும் நிலை நாளைக்கு உணவுக்கும் திண்டாடும் நிலை வந்துவிடும் .அதனால் வண்டலூரில் இருந்து சில கிலோமீட்டர்களே இருக்கும் இந்த பகுதியில் மக்களோடு இணைந்து நிற்க சென்னை நகர மக்களும் முன் வரவேண்டும் என போராட்டத்தை ஒருங்கிணைத்த தமிழ்நாடு தேசிய விவசாய சங்கத்தின் பொறுப்பாளர் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here