ஊடக பலம்.The power of media- அகசு.மணிகண்டன்

சமீபத்தில் உலகளவில் டிரெண்டிங் ஆனது ஒரு திரைகதாபாத்திரத்தின் பெயர்.அது ஏன் அவ்வளவு வைரலாக்கப்பட்டது,
அதிதீவிரமாக அனைவராலும் பேசப்பட்டது எப்படி?மீடியா அந்த விசயத்தை கையில் எடுத்ததே காரணம். சாதாரண ஒரு விசயத்தை ஒன்றுக்கும் உபயோகமில்லாததையும் வைரலாக்கிய பெருமை மீடியாவின் சக்தி.

தமிழக மக்களின் வாழ்வாதாரம் பறிபோவது , தமிழக மக்கள் உாிமை இழப்பது போன்ற கொடுஞ்செயல்கள் முதலில் மீடியாவுக்குதானே தொியும்.நாட்டின் நான்காவது தூண் மக்களின் நலனில் பாடுபடாமல் இருப்பது ஏன்?.

வேலைவாய்ப்பு பற்றிய விழிப்புணா்வு தமிழக இளைஞா்களிடம் இல்லை, இடஒதுக்கீடு,லஞ்சம்,சிபாரிசு,அதிகார வர்க்கத்தின் நெருங்கிய தொடர்பு போன்றவைகளால்தான் அரசாங்க பணிகளில் அமரமுடியும் என்ற போலி பிம்பத்தில் சுழலுகின்றனா்.அதனை தவிர்த்து அந்த பிம்பத்தில் இருந்து இளைஞா்களை வெளிவர வைக்க வேண்டியது மீடியாவின் கடமை.

அரசாங்க பணிகள்,தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள்,அரசாங்க பணிகளுக்கான தகுதி தேர்வுகள் எப்படி நடைபெறுகிறது, எவ்வளவு பணியாளா்கள் தேவை போன்ற தகவல்களையும் மீடியா காட்ட வேண்டும்.

வியாபார நலனை மட்டும் பார்க்காமல் மக்கள் நலனையும் இந்த ஊடகங்கள் கருத்தில் கொண்டால் நம் தேசத்தில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

இது மீடியாவிற்கு சாமானியன் வைக்கும் கோாிக்கை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here