உப்பூர் அனல்மின் நிலைய திட்டத்தை எதிர்த்து 22 மீனவ கிராமங்கள் ஒன்று கூடின.

உப்பூர் அனல் மின் நிலைய பிரச்சனைகளை 22 கிராம மக்களும் எழுப்புவார்கள் என்பதால் கிராமசபை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக மக்கள் ஒன்ற திரண்டு மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்தனர்.

இதற்கான முயற்சிகள் பற்றி அதன் ஒருங்கிணைப்பாளர் தீரன் திருமுருகனின் சொல்வது-

2011 -2012-2013-2014 – 2015- 2016- 2017-2018 வரை _ நாம், வீடு, வீடாக தெரு தெருவாக சென்றோம். அயராத முயற்சியின் காரணமாக மக்கள் திரண்டு வந்து விட்டார்கள்.இந்த அரசு நியாயத்தின் பக்கம் நிற்காது.மக்களின் எதிர்ப்பு இருந்தாலும் பெற்றுக்கொண்ட கையூட்டிற்காக விசுவாசமாக அனல்மின் நிலையத்தை கொண்டு வந்து உங்கள் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கவே செய்வார்கள்.

மேலும் அரசின் நரி ஆட்டமும் துவங்கிவிடும். இனத் துரோகிகளும், போராட்டத்தையும், மக்களையும் பிரித்தாளும் சக்திகளும் பங்கு பெற அரசே வழிவகுக்கும்.

அரசு முடிவாக இருக்கின்றது இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியே தீருவேனென்று….

நாங்கள் நினைக்கிறோம், அதுவும் கடலோடியான நான் நினைக்கிறேன்
எத்தனை எத்தனை போராட்டம் நான் பார்த்திருக்கிறேன், களத்தையும் தீர்மானித்திருக்கிறேன். சொன்னா எழுத முடியாது – அப்படியிருக்கும் போது என் பகுதியிலேயே இப்படி ஒரு அழிவு திட்டமா ..?

சரி அத விடுவோம், இப்ப விசயத்திற்கு வருவோம், மீனவர்களை தாண்டித்தான் இந்த திட்டத்தை நீ நடைமுறைப்படுத்தியாக வேண்டும்.

போராடி வீழ்த்துவோம் இல்லையெனில் உயிரை கொடுத்து பல போராளிகளை உருவாக்கிட்டு தான் சாவோம்,

இவண் …
தீரன் திருமுருகன்
உப்பூர் அனல்மின் நிலைய எதிர்ப்பு போராட்ட குழு –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here