உடல் சார்ந்த வன்முறைகளிலிருந்து குழந்தைகளை பாதுகாப்போம்.-S.மீனா.உளவியலாளர்.

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான மற்றும் அவர்களின் உடல் மீதான வக்கிரமான குற்றங்கள் பரவலாக நடந்து வருகிறது. அடிப்படையில் இந்த மாதிரி குழந்தைகளிடம் நடந்து கொள்ளும் மனிதர்கள் ஒரு Anti-Social Element-ஆக, பல்வேறு உளவியல் பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் வக்கிர புத்தி கொண்ட மனநோயாளிகளாக இருக்க வேண்டும். ஏனெனில் Mentally & Physically Normal ஆக உள்ள மனிதர்கள் இவ்வாறு நடந்து கொள்வதற்கான வாய்ப்புகள் மிக குறைவு. மேலும், எப்பொழுதும் குழந்தைகளின் உடல் மீதான வன்முறைகளை நாம் Rape (கற்பழிப்பு) என்ற தவறான வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்துகிறோம், பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் இது போன்ற வார்த்தைகளினால் தனக்கு நேர்ந்த கசப்பான சம்பவங்களை நினைத்து மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகும். puberty நிலையை கூட அடையாத குழந்தைகளின் உடல் மீதான வன்முறைகளுக்கு Child abuse என்று பயன்படுத்துவதே சரியான வார்த்தை பிரயோகம் ஆகும்.
குழந்தைகளை இது போன்ற abuse-களில் இருந்து பாதுகாக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியவை:

  1. பெற்றோர்களை குழந்தைகள் அணுகுவது எளிதாக இருக்க வேண்டும். அதாவது குழந்தைகள் வளரும் சமயத்தில் பல்வேறு அசௌகரியமான கேள்விகளை கேட்பதற்கு வாய்ப்புகள் உண்டு. உதாரணமாக குழந்தை எப்படி பிறக்கிறது? வயதுக்கு வருவது என்றால் என்ன போன்றவை. இது போன்ற சமயங்களில் பெற்றோர்கள் குழந்தைகளை திட்டி, கண்டிக்காமல் முடிந்தவரை பக்குவமாக, அறிவுபூர்வமாக பதில் சொல்ல பழகிக்கொள்ள வேண்டும்.
  2. குழந்தைகளுடன் பேச, விளையாட, கதை சொல்ல பெற்றோர்கள் கட்டாயம் நேரம் ஒதுக்க வேண்டும். இன்றைய கடினமான சூழ்நிலையில் பொருளாதார தேடல், கடன் தொல்லைகள், உறவு சிக்கல்கள், மனஅழுத்தம், Phone addiction போன்ற பல்வேறு பிரச்சனைகள் பெற்றோர்களுக்கு இருக்கும். ஆனாலும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் available-ஆக இருப்பது அவசியம்.
  3. குழந்தைகளை தனியாக விளையாட அனுப்புவது அவசியம், ஏனெனில் அது அவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும். ஆனாலும், குழந்தைகளுக்கு தெரியாமல் அவர்களை கண்காணிக்க வேண்டும்.
  4. இந்தியாவில் குழந்தைகளுக்கு பாலியல் கல்வி கற்பிப்பது பற்றி நீண்ட நாள் விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் உடல், உறுப்புக்கள் பற்றிய புரிதல் கல்வி, பாலுறுப்புகள் எந்த வகையில் sensitive, previleged போன்ற விஷயங்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு எளிமையாக புரிய வைத்தல் நலம்.
  5. தொழில்முறை உளவியலாளர்கள், மருத்துவர்களை கொண்டு பள்ளிகள் குழந்தைகளுக்கு, அன்பான தொடுதல், வன்முறையான தொடுதல், தவறான தொடுதல் மற்றும் இவற்றிக்குள்ள வித்தியாசம், தவறான தொடுதலை எதிர்கொள்ளும் பொது தன்னை பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள் போன்றவற்றை பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் ஏற்படுத்துதல் கட்டாயம் பள்ளிகளின் கடமை ஆகும்.

S.மீனா.
உளவியலாளர்.
சேலம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here