ஈரான் – அமெரிக்கா- சூழும் போர் மேகங்கள்.- அபராஜிதன்

ஈராக் ரசாயன ஆயுதங்கள் வைத்திருக்கிறது, அதனால் உலகத்திற்கு ஆபத்து என்றெல்லாம் பல பொய் குற்றச்சாட்டுகளை கூறி அமெரிக்கா அதன்மீது எப்படி போர் தொடுத்ததோ அதே போல ஈரான் மீதும் போர் தொடுக்க பெரும் ஆர்வம் காட்டி வருகிறது.

முதலில் ஈரானின் எண்ணை வளத்தை கைப்பற்ற வேண்டும் ,இரண்டாவது போர் நடத்தி மிகப்பெரிய அளவிற்கு ஆயுத விற்பனை செய்யலாம். மத்திய கிழக்கில் ஒருபோதும் அமைதி திரும்பாமல் செய்யலாம். இப்படி பல நன்மைகளை பெறுவதற்கு அமெரிக்கா விரும்புகிறது.

இப்போது அமெரிக்கா ஈரான் மீது சாட்டும் குற்றம் ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முற்படுகிறது என்பதுதான் .இதுதான் உலகின் மிகப்பெரிய நகைச்சுவை. உலகிலேயே மிக அதிகமாக அணுஆயுதங்கள் வைத்திருக்கும் நாடு அமெரிக்காதான் .தன்னிடம் உள்ள அணுஆயுதங்களை எல்லாம் ஒழித்துவிட்டுத்தானே அடுத்தவர்களை ஒழிக்க சொல்ல வேண்டும்.ஆனால் அவர்கள் ஒழிக்க மாட்டார்களாம் .மற்றவர்கள் அனைவரும் ஒழித்துவிட வேண்டும்.இதற்கான அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தார்கள் .யாரும் கொடுக்கவில்லை.அவர்களே எடுத்து கொள்கிறார்கள் என்பதுதான் வேடிக்கை.

உலகின் முன்னணி தொழில் வளர்ச்சி பெற்ற நாடாக அமெரிக்கா விளங்கி வந்தாலும் இப்போது சீனா அதனை விஞ்சும் அளவிற்கு வளர்ச்சி கண்டிருக்கிறது.சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவின் பொருளாதார முகமையை தகர்க்க துவங்கியதில் இருந்தே அமெரிக்காவின் அச்ச உணர்வு வளர்ந்து வருகிறது.

அமெரிக்காவின் பொருளாதாரமும் தொடர்ந்து சிக்கலான நிலையிலேயே இருந்து வருவதால் தங்கள் பொருளாதார நிலையை சரி செய்ய அவர்களுக்கு ஒரு போர் தேவைப்படுகிறது.வடகொரியா மீது போர் தொடுக்க செய்த முயற்சிகள் முடியாமல் போனது. வெனிசுலா மீதும் முயற்சி செய்தனர். இப்போது ஈரான் குறிவைக்கப்படுகிறது.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பிறகு உலக சமநிலை குலைந்ததால் சோசலிச சார்பு ,அமெரிக்க எதிர்ப்பு நாடுகளை ஒவ்வொன்றாக வீழ்த்தி வந்த அமெரிக்காவும்,ஐரோப்பிய நாடுகளும் தற்போது ரஷ்யா மற்றும் சீனாவின் எழுச்சி காரணமாக பின்வாங்க துவங்கியிருக்கிறார்கள்.

ஈரான் மீது போர் தொடுப்பதாக மிரட்டும் அமெரிக்காவிற்கு ரஷ்யாவும்,சீனாவும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. மேற்கு ஐரோப்பிய நாடுகளும் ஈரான் மீது போர் தொடுப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை.ஏனெனில் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் லிபிய,ஈராக்கிய சிரிய,ஏமனிய யுத்தங்கள் அழிவைத்தான் கொண்டு வந்ததே தவிர தீர்வை அல்ல.

ஈரானும் பதிலடி கொடுக்க தயார் என்று அறிவித்துவிட்டது.எப்படி இருந்தாலும் கூடுமானவரை போர் தவிர்க்கப்பட வேண்டியது .ஏனென்றால் பாதிக்கப்படப்போவது சாமானிய மக்கள்தான். அமெரிக்காவின் இந்த போர்வெறிக்கு முடிவு கட்டினால்தான் இந்த உலகம் அமைதிப்பாதையில் பயணிக்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here