இந்தி திணிப்புக்கு தயாராகும் மோடி அரசு.

நாடு முழுவதும் உள்ள நடுநிலை வகுப்புகளில் இந்தி கட்டாயம் என புதிய தேசிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள தேசிய கல்வி கொள்கை கடந்த 1986ம் ஆண்டு உருவாக்கப்பட்டு பின்னர், 1992 ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்பின்னர் தேசிய கல்வி கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக புதிய தேசிய கல்வி கொள்கைக்கான பரிந்துரைகளை அளிக்க முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவை அமைத்தது. அந்த குழுவினர் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவை, புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால் நிஷாங்கிடம் ஒப்படைத்தனர். 

அதில், தேசிய கல்வி ஆணையம் உருவாக்குவது, மும்மொழிக்கொள்கையை உருவாக்குவது மற்றும் தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வை தடுப்பது போன்ற பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி மும்மொழி கொள்கையை, நாடு முழுவதும் நடுநிலை வகுப்பு முதல் அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹிந்தி கட்டாயம் அல்லாத மாநிலங்களில், இனி ஹிந்தி கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மோடி அரசு இந்தி திணிப்பிற்கு தயாராவதற்கான முன்னறிவிப்பே இந்த வரைவு திட்டம்.காங்கிரசாக இருந்தாலும் ,பா.ஜ.க வாக இருந்தாலும் மத்திய அரசானது நாடு முழுவதும் இந்தி மொழியை கொண்டு வரவேண்டும் என்பதில் தெளிவாக உள்ளன. இது பிரதேச மொழிகளை அழித்துவிட்டு இந்தியை இந்தியா முழுக்க பயிற்றுவித்து விட்டால் அதிகாரம் செய்வதற்கு உகந்ததாக இருக்கும் என்று எண்ணுகின்றனர்.மேலும் இந்தி பேசும் மாநிலங்களில் உள்ளவர்களை மற்ற மாநிலங்களில் வேலைகளில் அமர்த்துவதையும் திட்டமாக வைத்துள்ளனர். இந்த கட்டாய திணிப்பானது இந்தி பேசாத மாநில மக்களின் மீதான அரச வன்முறை ஆகும்.

இரண்டாவது இந்தி எதிர்ப்பு போருக்கு தயாராவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here