இந்திய பொருளாதாரமும்- தொழிலாளர்களும்- பெருங்களத்தூர் கார்த்திக்.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அதன் உற்பத்தி பொருளின் விற்பனையில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்திய ஒன்றியத்தில் தற்சார்பு பொருளாதாரத் திட்டங்கள் செயல்படுத்தாத நிலையில், உற்பத்தி நிறுவனங்கள் பெருமளவில் தனியார் முதலாளிகளிடத்தில் உள்ளது. இன்று இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்தித்து உள்ளது. இதற்கு மிக முக்கியமான காரணம் வாகனங்களின் விற்பனையும், ஏற்றுமதியும் சந்தையில் குறைந்துள்ளது. இதன் பின்விளைவாக வாகன உற்பத்தியும், உதிரிபாகங்கள் உற்பத்தியும் குறைந்துள்ளது.

மொத்தத்தில் இந்தியாவில் 119 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆட்டோமொபைல் துறை 37 மில்லியன் மக்களை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஆதரித்து வருகிறது. இந்தநிலையில் ஆட்டோமொபைல் துறையில் ஏற்படும் ஒட்டுமொத்த வீழ்ச்சியானது, ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் எதிரொலிக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இந்த நிதியாண்டில் கார்களின் விற்பனை 18.4 சதவீதம் குறைந்துள்ளது. சரக்கு வாகனங்களின் விற்பனை 16.6 சதவீதம் குறைந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் இருசக்கர வாகனங்களின் விற்பனை 11.7 சதவீதம் குறைந்துள்ளது. இது இந்திய சந்தையில் வரலாறு காணாத விற்பனை சரிவு. தற்போதைய சூழ்நிலையில் விவசாயம் பொய்த்துப் போனதால் டிராக்டர்களின் விற்பனையும் குறைந்துள்ளது.

மாருதி சுசுகி நிறுவனத்தின் சரிவு – 3.5%.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சரிவு – 21.18%.

ஹோண்டா நிறுவனத்தின் சரிவு – 10.27%.

மஹிந்திரா நிறுவனத்தின் சரிவு – 15%.

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சரிவு – 34%.

இந்த வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மீது அரசு தரும் அழுத்தம் மற்றும் லிக்விடிட்டி ஸ்க்வீஸ் (liquidity squeeze). மேலும் ஜிஎஸ்டி வரி அதிகப்படியாக இருப்பதால் வாகனங்களின் விற்பனை குறைந்துள்ளது.
இந்த வீழ்ச்சியின் விளைவு பல தொழிலாளர்களும் ஊழியர்களும் இன்றும் வேலை இன்றி தவிப்பதுதான்.

இதனால் ,ரெனால்ட் நிஸ்ஸான் நிறுவனத்தில் 1700 பேர் நீக்கப்பட உள்ளனர்.
மாருதி மற்றும் யமஹா நிறுவனம் பலரை வேலையிழப்பு செய்து வீட்டிற்கு அனுப்பி உள்ளது. அசோக் லேலண்ட் மற்றும் டாடா நிறுவன தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூட திட்டமிட்டுள்ளது.
டிவிஎஸ் மற்றும் ஹீரோ நிறுவனம் வார வேலை நாட்களை குறைத்துள்ளது. இதுமட்டுமின்றி பல விற்பனை நிறுவனங்கள் மற்றும் ஷோரூம்கள் மூடப்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய பின்னடைவில் இருந்து இந்திய ஒன்றியத்தின் பொருளாதாரம் எப்பொழுது சீராகும் என்பது கேள்விக்குறிதான்.? இதனால் வேலை இழந்து நிற்கும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறி தான்.?

கார்த்திக்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here