இந்திய சீன எல்லைப் பிரச்சனை…..அஸ்வினி கலைச்செல்வன்.

இந்தியாவின் லடாக் பிராந்தியத்தில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு தான் இந்திய – சீன படைகளுக்கு இடையிலான பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது.இருநாடுகளுமே கல்வான் பள்ளத்தாக்கில் ஆதிக்கம் செலுத்துவதை மிகவும் முக்கியமாகக் கருதுவதால், அந்தப் பகுதியில் பல ஆண்டு காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. கடந்த 40 ஆண்டுகளாக ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம்கூட நடைபெறாத கல்வான் பகுதியில் தற்போது மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த
கைக்கலப்பில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீன தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெளிவாகத் தெரியவில்லை. சீன ராணுவத்தினர் 43 பேருக்கு காயம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என இந்திய ராணுவம் தெரிவிப்பதாக இந்தியாவில் இருக்கும் ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

கல்வானில் இருநாட்டு படைகளுக்கிடையே இப்படி கைகலப்பு நடப்பது இது முதல்முறையல்ல. ஆனால் அது உயிர் பலி வரை சென்றிருப்பதுதான், பதற்றமடையச் செய்திருக்கிறது.

1950 களில் சீனா திபெத் மீது படையெடுத்து அதனை இணைத்துக்கொண்ட பிறகு பூடான் இந்தியாவுடன் பாதுகாப்பு கருதி நட்பானது. அப்போதிருந்து அது இந்தியாவின் ஆதிக்க வளையத்திற்குள் இருக்கிறது.1962-ல் இதுபோன்ற ஒரு எல்லைப் பிரச்னையையொட்டி இந்தியா-சீனா போர் நடைபெற்றது. அதற்கு பிறகு 2017-ல் இது போன்ற ஒரு எல்லை பிரச்னை மூன்று மாதங்கள் வரை உரசலாக நீடித்தது.இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே டோக்லாமில் சர்ச்சைக்குரிய பகுதி தொடர்பாக மோதல் போக்கு நிலவி வந்தது.சிக்கிம் மற்றும் பூடானுக்கு இடையில் ‘சும்பி பள்ளத்தாக்கு’ பகுதியில் சீனா அமைக்கும் சாலை, டோக்லாம் மைதானம் என்று அறியப்படும் பகுதி வரை செல்கிறது.
சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரான ஷாயோ லிஜியன், “தற்போதுள்ள சூழலை மேலும் சிக்கலாக்கும் வகையில், தன்னிச்சையாக எந்த நடவடிக்கையும் இந்தியா எடுக்க வேண்டாம்,” என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே இமயமலைப் பகுதியில் சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறாவிட்டால், இந்தியா அவமானப்பட வேண்டியிருக்கும் என்று சீன அரசு ஊடகம் அப்போது எச்சரிக்கை விடுத்தது.நெருக்கடியான சூழல் நிலவும் வகையில் இந்தியா சீனாவின் மிக பெரிய வர்த்தக சந்தையாக மாறியுள்ளது.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை போராட்டக்காரர்களால் முற்றுகை இனவெறிப்போராட்டம் என அமெரிக்காவே கலவர பூமியாக வெடித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய சீன எல்லை பிரச்சனைக்கு ஆலோசனை வழங்கிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு தக்க பாடம்!?புகட்டும் விதமாக டிக்டாக், ஹலோ, யூசி பிரவுசர், கேம் ஸ்கேன்னர் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதித்திருக்கிறது.

பாகிஸ்தானுக்கு எதிராக பொங்கியெழும் இந்திய வீரம் சீனாவுக்கு எதிராக ஏன்? எழமாட்டேன் என்கிறது நமக்கெல்லாம் புரியாத புதிராகத்தான் இருக்கிறது.

அஸ்வினி கலைச்செல்வன்.