இந்திய குடியுரிமை திருத்த மசோதா – அஸ்வினி கலைச்செல்வன்.

CAB :இந்திய குடியுரிமை திருத்த மசோதா 1955 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி மக்களவையில் முன்மொழியப்பட்டு,திருத்தப்பட்டது.

கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது.1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் சட்டத் திருத்தம் செய்யும் சட்ட முன்வடிவை இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில்,  இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா 09 டிசம்பர் 2019 அன்று அறிமுகப்படுத்தினார்.இச்சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தால், மக்களவையில் இச்சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.

அதன் காரணமாக தற்போது அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள்,பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்பதே அந்த திருத்தம்.

மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும்.

அந்த மூன்று நாடுகளில் இருந்து வரும் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், சமணர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். ஆனால் இந்த மசோதா இஸ்லாமியர்களுக்கு பொருந்தாது. இதனால் இந்த மசோதா கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.

திருத்தப்பட்ட இந்த மசோதாவில் சில பகுதி மக்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மிசோரம், மேகலாயா மற்றும் அசாம், திரிபுரா மாநிலங்களில் (சில பகுதிகளில்) இந்த சட்டத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மணிப்பூர் மாநிலம் முழுவதும் இந்த சட்டம் கடைபிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.மத சார்பின்மையற்ற நாட்டில் மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவதை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதை பெரும்பாலோர் எதிர்த்து வரும் நிலையில் அரசானது சிறுப்பான்மையினருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இச்சட்டமானது திருத்தப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது.

அப்படியென்றால் இச்சட்டத்தில் இஸ்லாமியர்களையும் சேர்த்து இருக்க வேண்டும்.பாகிஸ்தான் அகமதியாக்களையும், மியான்மர் ரோஹிங்கியாக்களையும் சேர்க்கவில்லை என்பதால் பாஜக அரசானது இஸ்லாமியர்களை பெரும்பான்மையானவர்கள் என்று ஒத்துக்கொள்ள போவதுமில்லை. அதுமட்டுமின்றி,இலங்கையில் இன்னல்களை சந்தித்த இலங்கை தமிழர்களை ஏன் இந்த பட்டியலில் சேர்க்கவில்லை என்ற கேள்வியும் வலுக்கிறது.பாகுப்பாடின்றி குடியுரிமை வழங்கும் சட்டத்தை வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் அஸ்ஸாமில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களை கண்டறிய (NRC) நடவடிக்கை எடுத்தது.

இந்த நடவடிக்கையின்படி, அஸ்ஸாம் மக்கள் மேற்குறிப்பிட்ட காலகட்டத்துக்கு முன்னதாக இந்தியாவில் வசித்து வந்தவா்கள் என்பதை 1971-ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதிக்குள்ளாக நிரூபிக்க வேண்டும் என்று அறிவித்தது.

இந்த நடவடிக்கை மதத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. அதே வேளையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மதத்தை அடிப்படையாகக் கொண்டது.
இவ்விரு திருத்தங்களையும் தொடர்பு படுத்தி பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விலக்கப்பட்ட வங்கதேச இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்க இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வழிவகை செய்கிறது.

அப்படியானால், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விலக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடியேறிகள் இந்த குடியுரிமை பெற்று அஸ்ஸாம் மாநிலத்திலேயே தங்க முடியும்.

இதன் காரணமாக வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பல அமைப்புகள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்கின்றன.

முழுக்க முழுக்க மதத்தை அடிப்படையாகக் கொண்டதாக இச்சட்டமானது திருத்தப்பட்டது பெரும் எதிர்ப்பை சந்திந்துள்ளது. மேலும் இச்சட்டமானது சமத்துவ இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

அஸ்வினி கலைச்செல்வன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here