இந்திய அரசை அதிரச் செய்த வேல்முருகன்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழ்நாடெங்கும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.பல்வேறு தரப்பாலும் தன்னெழுச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழர்களை முட்டாளாக கருதும் இந்திய அரசுக்கு ஏப்ரல் 1 நாள் குறிக்கப்பட்டது.தமிழ்நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை முற்றுகையிடப்போவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் அறிவித்தனர்.

அதே போல ஏப்ரல் 1 தமிழக வாழ்வுரிமைக் கட்சி முற்றுகைப் போராட்டத்தை நடத்தியது.வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற சுங்கச்சாவடி முற்றுகையின் போது இளைஞர்களால் சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் நேற்று இளைஞர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் போராட்டத்தையே பெருமளவு பகிர்ந்துள்ளனர்.மக்கள் மத்தியிலும் இப்போராட்டத்திற்கு ஆதரவு பெருகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here