இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூளுமா?

காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட 50 ராணுவ வீரர்களின் இழப்புக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் இந்திய விமான படை எல்லையை கடந்து பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதிகளின் முகாம்களை தாக்கியது.300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று இந்திய ராணுவம் அறிவித்தது. ஆனால் பாகிஸ்தான் அதனை மறுத்துள்ளது.

இதற்கிடையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இருதரப்பிலும் தொடர்ந்து ஆயுத பிரயோகங்கள் நடைபெற்று வருகின்றன. எல்லைபுறங்களில் பீரங்கி,மார்ட்டர் தாக்குதல்களும் விமானப்படை தாக்குதல்களும் நடைபெற்று வருகின்றன.

இன்று காலை அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானின் F-16 ரக விமானத்தை வீழ்த்தியதாக இந்திய ராணுவம் அறிவித்தது. பதிலுக்கு பாகிஸ்தானும் இந்தியாவின் இரண்டு போர் விமானங்களை வீழ்த்தியுள்ளோம், இரண்டு விமானிகளை கைது செய்துள்ளோம் என்று அறிவித்திருக்கிறது.ஒரு விமானி திரும்பவில்லை என இந்திய ராணுவமும் உறுதி செய்துள்ளது.

காஷ்மீரின் பட்காம் பகுதியில் இன்று காலை இந்தியாவின்  Mi-17 ஹெலிகாப்டர் ஒன்று வீழ்த்தப்பட்டுள்ளது. 6 இந்திய விமானபடை வீர மரணமடைந்துள்ளனர்.

போர் துவங்கிவிட்டால் அதன் போக்கும் ,கட்டுப்பாடும் என் கையிலோ ,மோடியின் கையிலோ இருக்காது.அதனால் பேச்சுவார்த்தையின் மூலமாக இந்தப்பிரச்சனையை தீர்ப்பதற்கு பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. புல்வாமா தாக்குதல் குறித்த விசாரணைகளுக்கு உதவி செய்ய பாகிஸ்தான் தயாராக இருக்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார்.

வழக்கம் போல இந்திய ஊடகங்கள் அனைத்து செய்திகளையும் தராமல் ஒரு பக்கமான செய்திகளையே  காட்சி ஊடகங்களில் காண்பித்து வருகிறது.தேசிய வெறியை இன்னும் அதிகரிக்க மட்டுமே இந்தப்போக்கு உதவுமே தவிர இந்த பிரச்சனையை தீர்க்க எந்த வகையிலும் உதவாது.

சீனா போன்ற நாடுகள் இந்தியாவும் ,பாகிஸ்தானும் இந்தப்பிரச்சனையை சுமுகமாக பேசி தீர்க்க வேண்டும் .இரண்டுமே அணு ஆயுதம் தாங்கியிருக்கும் நாடுகள் என்பதால் தெற்காசிய பகுதி போர்க்களமாக மாறுவது உலக ஒழுங்கிற்கு நல்லதல்ல என்று அறிவித்துள்ளது.

இந்தியாவின் வடக்கு விமான தளங்கள் மூடப்பட்டு இருந்து இப்போது விமானங்கள் பறக்க அனுமதிக்கப்படுகின்றன.பாகிஸ்தான் வான் வெளி மூடப்பட்டுள்ளதால் பாகிஸ்தானுக்கு விமான போக்குவரத்தை பல நாடுகள் நிறுத்தியுள்ளன.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் போர் மூண்டால் அது இரு நாடுகளுக்குமே பேரிழப்பாக அமையும். போரினை தவிர்ப்பதற்கு இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு வருவது நல்லது.அதனை விடுத்து போரை தொடர்வதற்கு எத்தனித்தால் சில ஆயிரம் உயிர்களை  இழக்க  இருதரப்பும் தயாராக வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here