ஆர்.கே நகருக்கு பயன்படும் ‘என்ன நடக்குது நாட்டுல’

ஆர்.கே நகருக்கு பயன்படும் 'என்ன நடக்குது நாட்டுல'
ஆர்.கே நகருக்கு பயன்படும் 'என்ன நடக்குது நாட்டுல'
‘மதுரவீரன்’ திரைப்படத்தில் சமுத்திரக்கனி, சண்முக பாண்டியன் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். இப்படத்தில் யுகபாரதி எழுதிய ‘என்ன நடக்குது நாட்டுல’ பாடல் ஆர்.கே நகர் வரை சென்றுள்ளது.

சமகாலத்தில் நம் சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரிக்கும் வகையில் அமைந்திருந்த இப்பாடலை தற்போது பல்வேறு அரசியல் கட்சிகள் பிரச்சார பொதுகூட்டத்தில் தங்கள் கருத்துக்களை எடுத்து சொல்ல பயன்படுத்திவருகிறார்கள். இன்றையளவில் பரபரப்பாக இருக்கும் RK நகர் பிரச்சார களத்தில் தவறாமல் “ என்ன நடக்குது நாட்டுல “ பாடல் ஒலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மதுரவீரன் திரைப்படத்தின் முதல் சிங்கள் பாடலே பெரிய அளவில் மக்களிடம் சென்று அடைந்திருப்பது படகுழுவுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

இதை பற்றி படத்தின் இயக்குநர் P.G. முத்தையா கூறியது , எனக்கு படத்தில் பட்டுக்கோட்டையார் பாடலை போல ஒரு பொதுவுடைமை பாடல் தேவைப்பட்டது. இதை நான் கவிஞர் யுகபாரதியிடம் கூறியதும் அவர் “ என்ன நடக்குது நாட்டுல “ என்று தொடங்கும் பாடல் வரிகளை எனக்கு எழுதி தந்தார். நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக மக்களிடம் இந்த பாடல் சென்றடைந்துள்ளது. அரசியல் கட்சி பொதுகூட்டங்களிலும் இப்பாடல் தற்போது முக்கிய பங்குவகிக்கிறது. இப்பாடலின் இசை எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி டோலக் மற்றும் ஹார்மோனியம் என்ற இரண்டே கருவிகளை கொண்டு இதை உருவாக்கியுள்ளார். பாடல் வரிகளின் முக்கியத்துவம் மற்றும் நிஜமான மேடை பாடலை போல் இப்பாடல் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து சந்தோஷ் தயாநிதி இரண்டே கருவிகளை கொண்டு இப்பாடலை உருவாக்கியதால் இப்பாடல் தற்போது மேடையில் இசையமைத்து பாடுபவர்களுக்கு எளிமையாக உள்ளது.

நண்பர்கள் பலர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு “ என்ன நடக்குது நாட்டுல “ பட்டுக்கோட்டையார் பாடலை போல் உள்ளது என்று கூறியது , நான் நினைத்தது போல் இப்பாடல் வந்துள்ளது என்ற நம்பிக்கையை தந்தது என்றார் இயக்குநர் P.G.முத்தையா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here