ஆந்திராவில் பலியான தமிழர்களின் உடல்கள் அடக்கம்

ஆந்திர மாநிலம் கடப்பாவில் மர்மமான முறையில் இறந்துக்கிடந்த 5 தமிழர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

அதேவேளை, மர்மமான முறையில் 5 தமிழர்கள் உயிரிழந்தது தொடர்பில் சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட வேண்டுமென்கிற கோரிக்கையும் வலுப்பெற்றிருக்கிறது.

ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஏரியில் கடந்த திங்கள் அன்று 5 தமிழர்களின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. குறித்த தமிழர்களின் மரணத்தை செம்மர கடத்தலோடு தொடர்புபடுத்தி பல்வேறு யூகங்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

உயிரிழந்த 5 பேரும் சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆவர். 5 பேரின் உடலும் நேற்றிரவு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.. தொடர்ந்து அதிகாலையில் அடக்கம் செய்யப்பட்டது.

இதன்போது உடல்கள் கொண்டுவரப்பட்ட வாகனத்தை மறித்த தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மற்றும் பழங்குடி அமைப்பினர், 5 பேரின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here