அமெரிக்கா – சீனா வர்த்தகப்போர்- அபராஜிதன்.

சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10 சதவிகிதமாக இருந்த இறக்குமதி வரியினை அமெரிக்கா 25% சதவிகிதமாக அதிகரித்துள்ளது.இது சீன ஏற்றுமதியாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டே இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது.

சீனாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தையும் தனது நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கூறி தடை செய்துள்ளது அமெரிக்கா.கூகுள் நிறுவனமும் ஹூவாயுடன் வர்த்தகத்தை தடை செய்வதாக அறிவித்துள்ளது.இதனால் கூகுளின் ஆண்டிராய்டு தளத்தை ஹூவாய் பயன்படுத்துவதற்கு சிக்கல் ஏற்படலாம்.

Vilnius, Lithuania – August 8, 2017: Huawei Technologies company headquarter in the modern office building skyscraper in the business district of Vilnius, Lithuania.

உலகம் முழுவதும் 5 G அலைவரிசை அமைப்பதற்கு பல்வேறு நாடுகள் ஹூவாயுடன் ஒப்பந்தங்கள் போடுவது அமெரிக்காவை மேலும் எரிச்சலூட்டி வருகிறது. அமெரிக்காவின் இந்த செயல்பாடுகள் உலக வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிரானது என்றும்,சீனா இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் என்றும் அந்த நாடு அறிவித்துள்ளது.அதற்கேற்றார் போல் சீனாவில் இறக்குமதியாகும் 60 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு வரியினை அதிகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கடன் பத்திரங்களை அதிகம் வைத்திருக்கும் நாடுகளில் சீனாவும் ஒன்று. வர்த்தகப்போர் நடந்து கொண்டிருக்கும் இந்நிலையில் அந்த கடன் பத்திரங்களை பெருமளவிற்கு விற்று வருகிறது. இது நிச்சயம் அமெரிக்காவிற்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும்.
உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதாரங்கள் மோதுவது உலகெங்கும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here