அமெரிக்கா: காவல்துறையின் பயங்கரவாதத்தை தொழிலாளர் வர்க்கம் எவ்வாறு முடிவுக்கு கொண்டுவர முடியும்?

இந்த கட்டுரையை தேசத்தின் குரலுக்காக மொழிபெயர்த்தவர் முனைவர் சபுர் அலி.

வரலாற்றில் முன் எப்போதும் இல்லாதவகையில் சமீபத்திய வாரங்களில், அமெரிக்கா வெளிப்படையான ஒரு புரட்சிகர எழுச்சியை நோக்கி நெருங்கியுள்ளது. இனவெறியின் அடிப்படையில் மினியாபோலிஸ் காவல்துறையினரால் நிகழ்ந்த ஜார்ஜ் ஃபிலாய்டுவின் கொலை மிக பெரிய அளவில் ஒரு இயக்கத்தைத் தூண்டிவிட்டு உள்ளது. பல ஆண்டுகளாக மக்களிடம் உருவான அதிருப்தியை அது கட்டவிழ்த்து உள்ளது. பல நகரங்களும் கிளர்ச்சி நிலைகளை நோக்கி முன்னேறி வருகின்றன. ஆர்ப்பாட்டங்களின் அலை இரண்டு வாரங்களில் அதிவேகமாக பெருகியுள்ளது. பெருநகரங்கள், சிறு நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகள் என கிட்டத்தட்ட 1,400 இடங்கள் பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றன.

முன் எப்பொழுதும் இல்லாத வகையில் சாதாரண தொழிலாளர்களை அணிதிரட்டிய இப்புரட்சி எல்லாவற்றிற்கும் மேலாக, உலகத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் நினைவில் ஒரு நீடித்த முத்திரையை பதித்திருக்கிறது. 2020ஆம் ஆண்டின் நிகழ்வுகளை கண்கூடாக பார்த்த பிறகு, நாம் புரட்சியின் சகாப்தத்தில் வாழ்கிறோம் என்பதை யாரும் மறுக்க முடியாது. மேலும் அமெரிக்காவில் உள்ள மக்கள் தற்போதைய இந்த அமைப்பை கவிழ்க்கும் திறன் கொண்டவர்கள் என்ற உண்மையையும் எவரும் எளிதில் கடந்து போக முடியாது.

இந்த உணர்தல் முதலாளித்துவ வர்க்கத்தின் ஆணி வேரை அசைத்துள்ளது. ஜனாதிபதி டிரம்ப் வர்க்க பிளவுகளை ஆழப்படுத்தினார் அது பென்டகனுக்குள்ளேயே அவருக்கு எதிராக முரண்பாடுகளைத் தூண்டியது. இதன் விளைவாக போராட்டக்காரர்கள் மீது அவருக்கு ஒரு வித பயம் உருவானது. இப்பயத்தின் காரணமாக ஒரு சில எதிர்ப்பாளர்கள் அவரை நெருங்கிய போது பாதுகாப்பிற்காக அவர் பரிதாபமாக வெள்ளை மாளிகைக்கு கீழே ஒரு நிலத்தடி பதுங்கு குழிக்குள் ஓடினார்.

ஜனநாயகக் கட்சியினரைப் பொறுத்தவரை, அவர்கள் இயக்கத்தைத் தடம் புரட்டுவதற்கும், மக்களை வீதிகளில் இருந்து வெளியேற்றுவதற்கும் வெறித்தனமாக எத்தனிக்கின்றனர். அவர்கள் தந்திரத்தை நம்பினர் மற்றும் ஒரு உன்னதமான சூழ்ச்சியை நாடினர். இயக்கத்திற்கும் அதன் கோரிக்கைகளுக்கும் ஆதரவாக வெளியே வந்து, பின்னர் இயக்கத்தின் புரட்சிகர உள்ளடக்கத்தை நீர்த்து போக செய்து, இயக்கத்தின் பயணத்தை அதன் பாதையில் இருந்து திருப்ப முயற்சித்தனர்.

அமைப்பு ரீதியான ஒழுங்கும், வெகுஜனக் கட்சிக்கு உரிய செயல் திட்டமும், குறிப்பிட தலைமையும் இல்லாத போதிலும், இயக்கம் அதன் குரலைக் கண்டுபிடிக்கத் தொடங்கியுள்ளது. “பணத்தைத் திரும்பப் பெறுதல்” அல்லது “காவல்துறையை ஒழித்தல்” என்ற கோரிக்கைகள் போராட்டக்காரர்களை இயல்பாக ஒருங்கிணைக்கிறது. இந்த கோஷங்களை இப்போது நூற்றுக்கணக்கான நகரங்களில் ஆர்ப்பாட்டங்களின் அடையாளமாக காணலாம். எதிர்ப்பாளர்களில் பெரும்பாலோருக்கு இதன் பொருள் என்னவென்றால், காவல்துறையை சீர்திருத்த முடியும் என்று அவர்கள் இனியும் நினைக்கவில்லை. மாறாக காவல்துறையையின் வேர் மற்றும் கிளைகளை அகற்ற வேண்டும் என்று கருதுகின்றனர். இருப்பினும் அமைப்பு ரீதியான கட்டமைக்கப்படாத இயக்கத்தின் வடிவமும், சமூக மாற்றத்திற்கான ஒரு நிலையான வேலைத்திட்டமும் இல்லாததால், இந்த கோரிக்கைகள் தெளிவற்ற தன்மையைக் கொடுக்கின்றன. இது பல வகையான விளக்கங்களுக்கு வாய்ப்பை கொடுக்கின்றன. இவ்வாய்ப்பு ஆளும் வர்க்கத்திற்குத் சாதகமான செயல்பாட்டிற்கு உதவுகிறது.

போராட்டத்தின் விளைவாக பல முக்கிய நகரங்கள் தங்களது போலீஸ் துறை சார்ந்த வரவு செலவுத் திட்டங்களை குறைப்பதற்கு ஆதரவாக வெளியே வர நிர்பந்திக்கப்பட்டுள்ளன. காவல்துறையினர் “மூச்சுத் திணறல்” உண்டு பண்ணும் எவ்வித செயல்பாடுகளையும் மக்கள் மீது பயன்படுத்த கூடாது என நியூயார்க் மாநில சட்டமன்றம் சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது. போராட்டத்தின் விளைபொருளாக வென்ற அனைத்து உண்மையான சீர்திருத்தங்களையும் மார்க்சிஸ்டுகள் ஆதரித்தாலும், மூச்சுத் திணறலைத் ஏற்படுத்த கூடிய நடைமுறையை இந்த சீர்திருத்தங்கள் முடிவுக்குக் கொண்டுவரும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, கொலை சட்டவிரோதமானது, இருப்பினும் காவல்துறையினர் ஜார்ஜ் ஃபிலாய்டைக் கொன்றனர். மூச்சுத் திணறலைத் ஏற்படுத்த கூடிய நடைமுறையை அவர்கள் நிறுத்திவிட்டாலும் கூட, எதிர்ப்பாளர்கள் மற்றும் கைதிகள் மீது வன்முறையைத் தூண்டுவதற்கு அவர்களுக்கு இன்னும் ஏராளமான வழிகள் உள்ளன.

“காவல்துறையைத் திருப்பித் பெற வேண்டும்” என்ற கோரிக்கையின் “உண்மையான அர்த்தத்தை” மாற்றி முதலாளித்துவத்தின் மோசடிக்கு உதவ முதலாளித்துவ பத்திரிக்கைகளின் அனைத்து சக்திகளும் அரசியல் தளத்தின் வாயிலாக அணிதிரட்டப்பட்டுள்ளன, போலீசை ஒழிப்பதை இந்த கோரிக்கை குறிக்கவில்லை என்று இப்பத்திரிக்கைகள் பொதுமக்களுக்கு உறுதியளிக்கின்றன. இந்த கோரிக்கை பொது பாதுகாப்பை மறுபரிசீலனை செய்வது பற்றி மட்டுமே பேசுகிறது என்ற பிம்பத்தை உருவாக்குகின்றன.

இந்த பிரச்சாரத்தின் தலைமையாக ஜனநாயகக் கட்சி ஆதிக்கம் செலுத்தும் மினியாபோலிஸ் நகர சபை உள்ளது. இது பல வருடங்களாக போலீஸ் பயங்கரவாதத்தின் கொடிய ஆட்சிக்கு தலைமை தாங்கிய பின்னர்,இன்று திடீரென்று “ஒளியைக் கண்டுள்ளது”, போல…. மினியாபோலிஸ் காவல் துறையை “தகர்க்கும்” எண்ணத்தில் தன்னை ஐக்கியப் படுத்த முனைகிறது. ஆனால் இதன் அர்த்தம் என்ன என்பது குறித்து நகர சபை இதுவரை எந்த விவரங்களையும் வழங்கவில்லை. உண்மை யாதெனில் அது இதுநாள்வரை எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்றவில்லை. அவர்கள் வெறுமனே ஒரு பொது அறிவிப்பை மட்டுமே வெளியிட்டனர். அதே மூச்சில், தற்போதைய காவல்துறைத் தலைவரை அவர்கள் பாராட்டினர். ஜனநாயக கவுன்சில் உறுப்பினர் பிலிப் கன்னிங்ஹாமின் வார்த்தைகளில் கூறுவதானால், “இந்த புதிய அமைப்புகளை [பொதுப் பாதுகாப்பை] உருவாக்குவதற்கும் அவற்றுக்கு மாறுவதற்குத் திட்டமிடுவதற்கும் எங்கள் அற்புதமான காவல்துறைத் தலைவர் ரோண்டோ என்றும் எங்கள் சமூகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.” உண்மையில் இது ஒரு உன்னதமான “தூண்டில் மற்றும் சுவிட்ச்” சூழ்ச்சியாகும். இது இயக்கத்தை குழப்புவதற்கும் மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பாக திசை திருப்புவதற்கும் உதவுவதற்கு நோக்கம் கொண்டுள்ளது.

இங்கு நாம் தெளிவாக அறிவது என்னவென்றால், நகரத்தில் குடியிருப்பாளர்களுக்கு எதிராக ஆயுதத்தை பயன்படுத்துவதற்கான சட்டப்பூர்வ உரிமையுடன், ஒருவிதமான ஆயுதப்படை இன்னும் வழக்கத்தில் இருக்கும். அது என்னவென்று அழைக்கப்பட்டாலும் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குறைவான பணிகளுக்கு குறைவாகவே பயன்படுத்தப்பட்டாலும் கூட அப்படை இயங்கும். இதிலிருந்து நாம் அறிவது யாதெனில் முதலாளிகள் தங்களின் மோசமான வேலையைச் செய்ய ஒருவரைக் எவ்வாறேனும் கண்டுபிடிப்பார்கள் என்று நாம் உறுதியாக நம்பலாம். கணக்கிட முடியாத தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் வடிவத்தை எடுத்துக் கொண்டு கூட நகர அரசாங்கத்திற்கு கட்டுப்படாமல் முதலாளிகளுக்கு வேலை செய்யும் விதமாக ஒரு படை எழலாம். தங்கள் செல்வத்தையும் சக்தியையும் பாதுகாப்பதற்கும் இதனை முதலாளித்துவம் செய்யும். அவர்கள் தங்களின் விரல்களிலிருந்து மிக எளிதாக எதனையும் நழுவ விடமாட்டார்கள்.


அமெரிக்காவில் புரட்சிக்கான நிலைமைகள் விரைவாக முதிர்ச்சியடைந்து வருவதால், இயக்கம் சில தீவிரமான கேள்விகளைப் உயர்த்தி பிடிக்க வேண்டிய அவசர தேவை அதனிடத்தில் உள்ளது: அக்கேள்விகள் எவை எனில்: முதலாளித்துவத்தின் கீழ் காவல்துறை என்ன பங்கு வகிக்கிறது? இந்த நிறுவனத்தை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்.

ஆண்களின் ஆயுதக் குழுக்கள் மற்றும் நிறுவனமயமான இனவாதம்:-

ஹோமோ சேப்பியன்ஸ் போன்ற மனித இனம் சமூக வாழ்க்கையில் 95% க்கும் அதிகமான காலத்தை வர்க்கம் மற்றும் அரசு என்ற நிறுவனங்கள் இன்றி கடந்து வந்து இருக்கிறது. மனித வாழ்க்கை எப்போதுமே எளிதாக இருந்ததில்லை. ஆனால் பரவலாகப் பேசினால், மக்கள் உயிர்வாழ்வதற்கு ஒரு கூட்டுறவு முறையில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியிருந்தது. மேலும் சிறைச்சாலைகள் அல்லது சமூகத்தின் மற்ற பகுதிகளுக்கு மேலாக நிற்கும் சிறப்பு அடக்குமுறை அமைப்புகளின் தேவை இல்லாமல் அவர்கள் அத்தகைய கூட்டுறவு வாழ்க்கை வாழ்ந்தனர்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உருண்டோட மனிதர்களின் உழைப்பு மற்றும் உற்பத்தித்திறன் உயர்ந்தது. அதன் விளைவாய் அவர்கள் இயற்கையின் மீது தங்கள் சக்தியை விரிவுபடுத்தினர். இதனால் வேலை பிரிவுகள் பெருகி உழைப்பின் சிக்கலான பிரிவுகள் வளர்ந்தன. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், பலவிதமான தொடர்ச்சியான மற்றும் ஒன்றிணைந்த காரணிகளால், சமூகம் வர்க்கக் கோடுகளுடன் பிளவுபட்டது. ஒரு வர்க்க சமுதாயத்தில், மேலே உள்ள ஒரு சிறுபான்மையினர் அடிமட்டத்தினரின் உழைப்பிலிருந்து சுரண்டி வாழ்கின்றனர். ஆளும் சிறுபான்மையினரின் அதிகாரம், செல்வம் மற்றும் சலுகைகளை பாதுகாப்பதற்காக, அரசு என்று அழைக்கப்படும் நிறுவனத்தை உருவாக்கினர்.

பிரட்ரிக் ஏங்கல்ஸ், அரசை “ஆயுதமேந்திய ஆண்களின் குழு” என்றும் அது
ஆளும் வர்க்கத்தின் சொத்து நலன்களைப் பாதுகாப்பதை பிரதானமாக கொண்டு செயல்படுகிறது என்றும் விளக்கினார். இங்கு குறிப்பாக நாம் அறிவது யாதெனில் முதலாளித்துவத்தின் கீழ், ஒரு பரந்த அதிகாரத்துவம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், போலீஸ் மற்றும் இராணுவம் ஆகியவை அனைத்தும் அடங்கும். இவை அனைத்தும் “சட்டம் ஒழுங்கை” பாதுகாக்க அதாவது,முதலாளித்துவ சட்டங்களை மற்றும் முதலாளித்துவ ஒழுங்கை பராமரிக்க உள்ளன. இதன் பொருள், முதலாளித்துவ வர்க்கம் உற்பத்தி வழிமுறை கருவிகளை வைத்திருக்கும் ஒரு சூழ்நிலையை அரசு பாதுகாத்து நிலைநிறுத்துகிறது, அதாவது பொருளாதாரத்தின் முக்கிய உற்பத்தி நெம்புகோல்கள் அவர்களிடம் உள்ளன.

இன்று அமெரிக்காவில், வெறும் 500 நிறுவனங்கள் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளன. இதன் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 14 டிரில்லியன் டாலர் வருடாந்திர வருவாய் மற்றும் 1 டிரில்லியன் டாலர் லாபம். இப் பெருந்தொகை 1% மட்டுமே எண்ணிக்கை கொண்ட மேல்தட்டு கைகளுக்கு செல்கிறது. ஆனால் உண்மையாதெனில் மொத்த பணமும் தொழிலாளர்களுக்கு உரியது. ஏனெனில் அவர்களே “செல்வத்தை உருவாக்குபவர்கள்”, அவர்களின் உழைப்பே, இயற்கையின் மீது செலவிடப்படுகிறது, இதுவே எல்லா மதிப்பிற்கும் ஆதாரமாகும்.

இங்கு ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும் “சட்டத்தின் விதிகள்” என்பது பணக்கார 1% த்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான பிரிவைப் பராமரிக்கப் பயன்படும் ஒரே கருவி அல்ல. ஆளும் வர்க்கம் தொழிலாளர்களிடையே அனைத்து வகையான கூடுதல் பிளவுகளையும் உருவாக்கியுள்ளது. அவையாவன, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் சார்ந்த பிரிவுகள்; வெள்ளை காலர் மற்றும் நீல காலர் வேலை பிரிவுகள்; திறமையான மற்றும் திறமையற்ற வேலை ஆட்கள்; பெண்,ஆண் என பாலின வேறுபாடு சார்ந்த தொழிலார்கள்; குடியேறியவர்கள் மற்றும் பூர்வீகமாக பிறந்தவர்கள் என பல.

குறிப்பாக நச்சு தன்மை மிக்க அடிமைத்தனத்தின் மரபு காரணமாக, கடந்த காலத்தின் புலம்பெயர் வரலாற்றை நிகழ்காலத்தின் முன் கொண்டுவந்து, அமெரிக்க முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பிரிவுகளில் ஒன்று இனம் மற்றும் நிறவெறி. கடந்த சில நூறு ஆண்டுகளின் இரத்தக் கறை படிந்த வரலாறு என்ன கூறுகிறது என்றால், இனவெறியின் அசிங்கமான பூதத்தை பாட்டிலிலிருந்து வெளியேற்றினால், அதை மீண்டும் பாட்டிலுக்குள் கொண்டு வருவது அவ்வளவு எளிதானது அல்ல. தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதில் தீவிரமாக இருந்தால், அதனிலிருந்து இன்னும் அதிகமாக பலன்களை அடைய முடியும் என்பதை ஆளும் வர்க்கம் நன்றாக தெரிந்து வைத்திருகிறது. அமெரிக்க முதலாளித்துவத்தின் கில்டட் யுகத்தின் ஒரு “கொள்ளைக்காரன்” நிதியாளர் ஜெய் கோல்ட், ஒருமுறை “ஒரு பாதி தொழிலாளர்களை கொண்டு மற்ற பாதி தொழிலாளி வர்க்கத்தினரை கொல்ல முடியும் என்பதை நிரூபித்து” தனது தற்பெருமையை காட்டினார். உண்மையில், அமெரிக்கப் புரட்சிக்கு முன்பிருந்தே 1676 இல் பேக்கனின் கிளர்ச்சியின் ஆரம்பம் முதலே அமெரிக்க ஆளும் வர்க்கம் பிரித்தாளும் கொள்கையை பயன்படுத்தி வந்து இருக்கிறது.

இது போன்ற பெரிய இயக்கங்கள் நிகழும்போது, ​​மேலே உள்ளவர்கள் இயக்கத்தின் வீரியத்தை தணிக்க முற்படுகிறார்கள். ஆனால் தற்போதைய நெருக்கடி மற்றும் அணிதிரட்டப்பட்ட மக்களினால் உருவான அழுத்தத்தின் கீழ், அமெரிக்க ஆளும் வர்க்கம் உள்நாட்டுப் போர் மற்றும் புனரமைப்பு முடிவடைந்த காலத்தில் இருந்ததை விட பிளவுபட்டுள்ளது. எவ்வாறு நிலைமையை சாதகமாக கொண்டுவர முயற்சிக்கலாம் என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

அமெரிக்காவில் முதலாளித்துவம் இரண்டு முக்கிய கட்சிகளை தன் கைகளில் வைத்துள்ளது. பெரும்பாலும் குடியரசுக் கட்சியினர், குறிப்பாக டொனால்ட் ஜே. டிரம்ப் தந்திரமாக தனது அரசியல் நோக்கங்களை அடைய இழிந்த இனவெறி மீது சாய்ந்துள்ளனர். உடனடி அரசியல் நலன்களைப் பின்தொடர்வது அவர்களின் ஆளும் வர்க்கம் சார்ந்த ஒட்டுமொத்த அரசு எந்திரத்தையும், அமைப்புகளையும் தொடர்ந்து பலவீனப்படுத்துகிறது என்பதை அவர்கள் உணரவில்லை. தங்கள் பங்கிற்கு, ஜனநாயகக் கட்சியினர் அரசு எந்திரத்தை காக்க எழுச்சி இயக்கத்தை விட முன்னேற முயற்சிக்கின்றனர், அரசியல் குழப்பங்களை புகுத்துகிறார்கள் மற்றும் சட்டரீதியான தீர்வுகளில் மாயைகளை எழுப்புகிறார்கள். குடியரசுக் கட்சியினரைப் போலவே, அவர்களின் நோக்கமும் அமைப்பையும் அதன் அரச எந்திரத்தையும் பாதுகாப்பதாகவே இருக்கிறது. அவ்வாறு செய்வதற்கான முறைகளில் மட்டுமே இருவரும் வேறுபடுகின்றனர்.

மார்க்சிஸ்டுகள் இந்த பிரச்சினைகளுக்கு அரசியல் தெளிவைக் கொண்டு வந்து தெளிவான வழியைக் காட்ட முற்படுகிறார்கள். முதலாளித்துவ அரசின் இனவெறி பயங்கரவாதத்தைத் தடுக்க, தொழிலாளர் வர்க்கம் அதன் சொந்தக் கட்சியையும், அதன் சொந்த அரசாங்கத்தையும் கொண்டிருக்க வேண்டும், மேலும் அதன் சொந்த தற்காப்புக்காக ஒழுங்கமைப்பதை நோக்கி முன்னேற வேண்டும் என கருதுகின்றனர். இது விரைவான மற்றும் எளிதான தீர்வாக இருக்காது ஆனால் இதை தவிர வேறு வழி நம்மிடம் இல்லை எனவும் கூறுகின்றனர்.

இனவெறியும், அரசு எந்திரமுமின்றி நீங்கள் முதலாளித்துவத்தை கொண்டிருக்க முடியாது:-

சட்டங்கள், சமூக மந்தநிலை, சித்தாந்தம், பிரச்சாரம், மதம், “பிரித்தாளும் சூழ்ச்சி” மற்றும் மீதமுள்ளவைகளை கொண்டு அனைவரையும் எல்லா நேரத்திலும் வரிசையில் நிறுத்தி வைக்க போதுமானதாக இல்லை. ஆளும் வர்க்கத்தின் வல்லமையை நிலைநாட்ட மற்றும் வல்லமையை எதிர்ப்போரை தாக்கி, அத்தாக்குதலை எடுத்துக்காட்டாக காட்டி மற்றவரை பயமுறுத்த அரசின் அடக்குமுறை இங்கு ஏவப்படுகிறது. இந்த அடக்குமுறை ஒட்டு மொத்தமாக போராடும் மக்களையும் தாக்க கொண்டுவரப்படுகிறது. சில நேரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமுறைகளில், சில நேரங்களில் கண்மூடித்தனமாக.

ஒரு சிறிய சிறுபான்மையினர் தங்கள் ஆட்சியைச் செயல்படுத்த “ஆயுத அமைப்புகள்” இல்லாமல் ஒரு பெரும்பான்மையை சுரண்டுவதற்கான வழி இல்லை. இங்கு உண்மை யாதெனில் பெரும்பான்மையினரின் வாழ்க்கை நிலைமைகள் ஏற்கனவே மோசமானவை மற்றும் வேகமாக மோசமடைந்து கொண்டிருக்கிறது. தற்போதைய போலீஸ் படை போன்ற ஒரு நிறுவனத்தை உண்மையிலேயே அகற்ற, அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரத்தை எந்த வர்க்கம் கொண்டுள்ளது என்ற கேள்வி முக்கியமானது. மேலும், நீங்கள் ஒரு நகரத்திலோ அல்லது மாநிலத்திலோ காவல்துறையை கலைக்க முடியாது: காவல்துறையை தேசிய அளவில் கையாள வேண்டும்.

அமெரிக்காவில் சட்ட அமலாக்க முகமைகளின் பரந்த வலை  ஒன்று உள்ளது. கூட்டாட்சி மட்டத்தில், டி.இ.ஏ, ஏ.டி.எஃப், எஃப்.பி.ஐ, ஐ.சி.இ, கருவூல போலீஸ், யு.எஸ். மார்ஷல்ஸ், ரகசிய சேவை மற்றும் பல உள்ளன. அதற்கு மேல், இராணுவத்தின் ஒவ்வொரு கிளைக்கும் அதன் சொந்த போலீஸ் படை உள்ளது. தேசிய காவலர் உண்மையில் ஒரு பகுதிநேர அடிப்படையில் இருந்தாலும், அது மிகவும் இராணுவமயமாக்கப்பட்ட துணை போலீஸ் படை. 50 மாநிலங்களில் ஒவ்வொன்றிலும் குறைந்தது ஒரு மாநில அளவிலான சட்ட அமலாக்க நிறுவனம் உள்ளது, மேலும் மாவட்ட மற்றும் நகராட்சி மட்டங்களிலும், நீதிமன்றங்கள் , சிறைச்சாலைகள் போன்றவற்றிலும் சட்ட அமலாக்க நிறுவனங்கள் அதிகம் உள்ளன.

உண்மையில், 2018 நிலவரப்படி, அமெரிக்காவில் கிட்டத்தட்ட 690,000 முழுநேர சட்ட அமலாக்க அதிகாரிகள் பணியாற்றி இருகின்றனர். முதலாளித்துவ வர்க்கம் இதை ஒருபோதும் கைவிடாது. மேலும்  அவர்கள் அவ்வாறு செய்வார்கள் என்று வார்த்தைக்கு கூட கூறவில்லை. அனுமானமாக, ஒரு நகரம் அதன் போலீஸ் படையை அகற்றினால், மாநில அல்லது மாவட்ட காவல்துறையினர் தேவைக்கு ஏற்ப அங்கு செல்லலாம், அல்லது போலீஸ் செயல்பாடுகளைச் செய்வதற்கு வெவ்வேறு பெயர்கள் மற்றும் சீருடைகளைக் கொண்ட புதிய ஏஜென்சிகள் உருவாக்கப்படலாம். தேசிய காவல் துறையையும் அழைக்க முடியும், மேலும் நெருக்கடி நிலை  வரும்போது, ​​1807 இன் கிளர்ச்சி சட்டத்தின் கீழ் செயலில் உள்ள கடமை இராணுவத்தை கூட அழைக்க முடியும்.

காவல்துறையை நாம் எவ்வாறு ஒழிக்க முடியும்?

அனைத்து அர்த்தமுள்ள சீர்திருத்தங்களும் புரட்சியின் துணை தயாரிப்பு அல்லது புரட்சியின் அச்சுறுத்தல் என்று வரலாறு காட்டுகிறது. ஆனால் ஆளும் வர்க்கம் ஆட்சியில் இருக்கும் வரை, வெகுஜனங்களால் வென்ற எந்தவொரு சீர்திருத்தங்களும் எப்போதுமே இயற்கையில் மட்டுப்படுத்தப்பட்டவையாகவும், மீண்டும் பலவீனப்படுத்தப்படும் அபாயத்திலும் இருக்கும். மேலே விளக்கப்பட்டுள்ளபடி, அல்லது அந்த மாற்றத்தை செய்ய அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டாலும், முதலாளிகளுக்கு அவர்களின் அடிப்படை நலன்களைப் பாதுகாக்க ஒரு அரசு தேவைப்படுகிறது.

இந்த இறுதி பகுப்பாய்வில் நாம் அறிவது, இனவெறி மற்றும் காவல்துறை என்பது ஒரு ஆழமான சமூக நோயின் அறிகுறியாகும்: முதலாளித்துவ அமைப்பு ஒரு வரலாற்று முட்டுக்கட்டையாகும். இது பொது மனித முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கான எந்தவொரு திறனையும் வீழ்த்திவிடுகிறது. மேலும் முக்கிய உற்பத்தி வழிமுறைகளின் தனியார் உரிமை பெரும்பான்மையினரின் நல்வாழ்வுடன் என்றும் பொருந்தாது. இவ்வுண்மைகளே சமீபத்திய ஆண்டுகளில் உலகெங்கும் பரவியிருக்கும் சமூக எழுச்சிகளின் அலைக்கும், அமெரிக்கா உட்பட ஒவ்வொரு நாடுகளிலும் ஏற்படும் ஒரு சோசலிசப் புரட்சியை நோக்கித் நகர்தலுக்கும் உந்துசக்தியாக இருக்கிறது.

கடந்த மாதம் வரை, இதுபோன்ற அறிக்கை சராசரி பார்வையாளருக்கு அந்நியமாக தோன்றியிருக்கலாம், ஆனால் உலகின் மிக சக்திவாய்ந்த முதலாளித்துவ நாடு கூட இந்த செயல்முறையிலிருந்து விடுபடவில்லை என்பதை சமீபத்திய  நிகழ்வுகள் நிரூபித்துள்ளன. கடந்த கால புரட்சிகர மரபுகள் மற்றும் வெகுமக்கள் போராட்டங்களுக்கும், புதிய தலைமுறை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் இடையில் ஒரு வரலாற்று முடிச்சை நினைவுபடுத்தி இருக்கிறது. அவர்களில் மில்லியன் கணக்கானவர்கள் புரட்சிகர கருத்துக்களுக்கு தங்களது மனங்களை இப்பொழுது திறந்து இருகின்றனர்.

காவல்துறையைப் போன்ற ஒரு நிறுவனத்தை பிடுங்குவது என்பது போன்ற  சட்டத்தை இயற்றுவது அல்லது நிர்வாக உத்தரவை வழங்குவது எளிதானதல்ல என்பதை மில்லியன் கணக்கான மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். களைகளை நீக்க, நீங்கள் வேரை தோண்டி எடுக்க வேண்டும். சட்டங்களை அப்படியே அமல்படுத்தும்போது சட்ட அமலாக்க எந்திரத்தை ஒழிக்க முடியாது. ஏனெனில் அவை நிலைநிறுத்த வடிவமைக்கப்பட்ட வர்க்க சமுதாயமும். சமூக ரீதியாக உற்பத்தி செய்யப்படும் உபரி செல்வத்தை தனிப்பட்ட முறையில் கையகப்படுத்துதல் – மற்றும் அந்த செல்வத்தையும் தனியுடைமை ஆக்குதல் அதனை எதிர்ப்பவர்களை   மிரட்ட, அவர்களுக்கு சிறைவாசத்தை கொடுக்க  மற்றும் முழு மக்களையும் அச்சுறுத்த தேவையான சக்தியை அளிக்கும் மூலங்களை பாதுகாக்க படை  ஒன்று அவசியம். இதுவே முதலாளித்துவ ஆட்சியின் அடிப்படையாகும்.

குற்றவாளிகள், வறுமை மற்றும் சமத்துவமின்மை நிறைந்த உலகில் காவல்துறை அவசியமான அமைப்பு என்று பல சாதாரண மக்கள் நினைக்கிறார்கள் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால் உண்மையான குற்றவாளிகள் யார் எனில் இந்த பெரும் முதலாளிகளே.  ஒரு பெரிய தொகையை சம்பாதிப்பதற்காக அவர்கள் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுகின்றனர். உண்மை யாதெனில் மேற்கூறிய அனைத்து சிறிய குற்றங்களுக்கும் முக்கிய காரணியாக இருப்பது சமூகம் வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டதே ஆகும். இதன் விளைவாகவே இலாபத்தால் இயங்கும் செயற்கையான பற்றாக்குறை உருவாகிறது. மேலும் மக்கள் தங்கள் குடும்பங்களுக்கு உணவளிப்பதற்கும், உயிர்வாழ்வதற்கும் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற நிலையும் உருவாகி உள்ளது. மேலும், முதலாளித்துவத்தின் கீழ் உள்ள ஒரு அமைப்பில் மக்கள் பொருட்களைப் போலவே கருதப்படும் வடிவமைப்பு உள்ளது. இது தீவிர அந்நியப்படுதலை மனிதர்களிடையே உருவாக்கி சிதைந்த உறவுகளுக்கு வழிவகுக்கிறது. மாறாக ஒரு சோசலிச உலகில், வாழ்க்கையின் அனைத்து தேவைகளும் இன்னும் பலவும் அனைவருக்கும் கிடைக்கின்றன. இதன் காரணமாக ஒருவருக்கொருவர் இடையே உள்ள உறவுகள் உண்மையான மனிதநேய அடிப்படையில் செழித்து வளரும், மேலும் சிறிய குற்றங்கள் முதலில் சமூகத்தை விட்டு விலகும்.

முதலாளித்துவத்திற்கும் வர்க்கமற்ற, நிலையற்ற கம்யூனிசத்திற்கும் இடையிலான இடைக்கால காலகட்டத்தில் உருவாகும் சோசலிசம் தொழிலாளர் வர்க்கத்தை அதிகாரத்தில் வைத்து இருக்கும் போது பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சில அமைப்புகள்  தேவைப்படும் என்பதையும் இங்கு  கவனத்தில் கொள்ள வேண்டும். எவ்வாறாயினும்,இவ்அமைப்புகள் முதலாளிகளுக்கானது அல்ல,அது எப்பொழுதும் பெரும்பான்மையினரின் நலன்களுக்காகவே செயல்படும், மேலும் அவை உழைக்கும் மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்.

இதனால்தான் ‘காவல்துறையை கலைக்க அல்லது நிராயுதபாணியாக்குவதற்கான எந்தவொரு உண்மையான அர்த்தமுள்ள முயற்சியும் ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை அமைப்பதற்கான ஒரு வெகுஜன போராட்டத்தின் விளைவாக மட்டுமே ஏற்பட முடியும்’ என்று குறிப்பிடப்படுகிறது. தொழிற்சங்கத் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், வேலையற்றோர் மற்றும் மாணவர்கள் ஆகியோரால் ஆன தற்காப்புக் குழுக்கள் இந்த போராட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும். இவை மார்க்சிஸ்டுகளால் குறிப்பிடும்  ‘இரட்டை சக்தி’ என்ற தொடக்கத்தை குறிக்கிறது. இதுவே முதலாளிகளின் நிலைக்கு எதிராக இயங்க போகும் எதிர்கால தொழிலாளர்கள் சக்தியின் கரு.

எழுச்சி இயக்கத்தின்  ஆரம்ப வடிவத்தில், மினியாபோலிஸ் மற்றும் சியாட்டில் போன்ற இடங்களில் இதுபோன்ற குழுக்கள் இயல்பாக வெளிப்படுவதை நாங்கள் ஏற்கனவே கண்டோம். இக்குழுக்கள் பொதுமைப்படுத்தப்பட வேண்டும், ஜனநாயக மற்றும் பொறுப்புணர்வு கட்டமைப்புகள் இக்குழுக்களுக்கு கொடுக்கப்பட வேண்டும், மேலும் உள்ளூர், பிராந்திய மற்றும் தேசிய மட்டங்களில் இக்குழுக்கள் இணைக்கப்பட வேண்டும். தொழிலாளர் இயக்கத்தின் முழு சக்தியையும் பரந்த தொழிலாளர் வர்க்கத்தையும் அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே தொழிலாளர்கள் அரசின் அதிகாரத்தையும், முதலாளித்துவத்தின் வாடகை  குண்டர்களையும் மற்றும் வலதுசாரி போராளிகளையும் கைப்பற்ற முடியும்.

14 மில்லியனுக்கும் அதிகமானோரை கொண்ட பலம் மிகுந்த அமெரிக்க தொழிலாளர் வர்க்கம் தொழிற்சங்கங்களின் வடிவத்தில் வெகுஜன அமைப்புகளை உருவாக்கியுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட உழைப்பு, அதன் பரந்த உறுப்பினர்கள், சந்திப்பு இடங்கள், ஊடகங்கள் மற்றும் பலவற்றைக் கொண்டு, எல்லா இடங்களிலும் இத்தகைய குழுக்களின் விரிவாக்கத்தை எளிதாக்கவும் ஒருங்கிணைக்கவும் உதவும் ஒரு தனித்துவமான நிலையில் அது உள்ளது. ஏற்கனவே, பல தொழிற்சங்கத் தொழிலாளர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டு நிரப்பப்பட்டவர்களை கொண்ட பேருந்துகளை ஓட்ட மறுத்து போராட்டத்தில் பங்கு வகித்துள்ளனர்.
போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கம் இதில் தனது உறுப்பினர்களை ஆதரித்துள்ளது. ஜார்ஜ் ஃபிலாய்டை நினைவுகூரும் வகையில் சில நீண்டகால தொழிலாளர்கள் மற்றும் டீம்ஸ்டர்களும் வேலை நிறுத்தங்களை ஏற்பாடு செய்கிறார்கள். பல தனிப்பட்ட தொழிற்சங்க உறுப்பினர்கள் போராட்டங்களிலும் அண்டை பாதுகாப்பிலும் தீவிர பங்கு வகித்துள்ளனர்.

எவ்வாறாயினும், தொழிலாளர் இயக்கத்தின் தலைமைகள் இந்த இயக்கத்தில் தன்னால் முடிந்த பங்கைக் சரியாக செய்யவில்லை.  முக்கிய தொழிற்சங்கங்களின் தலைவர்களும் மற்றும்  AFL-CIOவும்  இந்த போராட்டத்தில் முன்னணியில் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒழுங்கமைக்கப்பட்ட உழைப்பாளர்கள் ஒரு பொது வேலைநிறுத்தத்தை ஒழுங்கமைக்கவும் செயல்படுத்தவும் அதிகாரம் பெற்றிருக்கின்றனர். இது ஆளும் வர்க்கத்தின் கவனத்தை ஈர்க்கும் என்பதில் நாம் உறுதியாக இருக்க முடியும்! மேலும் அமெரிக்காவை பொறுத்தவரையில், இது ஒரு பொது வேலைநிறுத்தத்தை விட அதிகமாக செய்யும். இது எந்த வர்க்கம் சமூகத்தை ஆள வேண்டும் என்ற கேள்வியை தெளிவாக முன்வைக்கும்.

இரு முதலாளித்துவ கட்சிகளிடமிருந்தும் உடனடியாக முறித்துக் கொண்டு தொழிலாளர் கட்சியைக் கட்டியெழுப்புவதன் மூலம் தொழிலாளர்கள் அழுகிய இரு கட்சி முறையை சிதைக்க முடியும். தொடர்ச்சியாக அமைப்புசாரா தொழிலாளர்களை பிரச்சாரங்கள் மூலம்  ஒழுங்கமைக்க முடியும். சமுதாயத்தில் உள்ள மனநிலையையும், அண்மையில் நடந்த வாக்கெடுப்பின் அடிப்படையிலும், அமெரிக்காவின் தொழிலாளர் தொகுப்பில் பாதிக்கு மேற்பட்டவர்கள் வாய்ப்பு வழங்கப்பட்டால் உடனடியாக ஒரு தொழிற்சங்கத்தில் சேருவார்கள் என்பதைக் காட்டுகிறது. மேலும் ஒரு போர்க்குணமிக்க நாடு தழுவிய பிரச்சாரம் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் எண்ணிக்கையை விரைவாக வீழ்த்தி அனைவருக்கும் அடிப்படையை அமைக்கும் வர்க்கப் போராட்டத்தில் முன்னேறி செல்ல முடியும். துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய தொழிலாளர் தலைவர்களில் பெரும்பாலோர் தங்களை வெறும் கருத்துக்களுக்கு மட்டுப்படுத்தி பிடென் மற்றும் ஜனநாயகக் கட்சியினருக்குப் பின்னால் தங்கள் ஆதரவைத் தூக்கி கொடுத்து விடுகிறார்கள். இங்கு ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் பிடென் மட்டுமல்ல, பெர்னியும் காவல்துறையினரை பகிரங்கமாக  பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இவர்களுக்கும் டொனால்ட் டிரம்புடன் அடிப்படையில் வேறுபாடு கிடையாது.

AFL-CIO வின் கீழ் இயங்கும் போலீஸ் “தொழிற்சங்கங்களை” பொறுத்தவரை, அவர்கள் நீண்ட காலமாக தங்கள் அணிகளுக்குள் பரவலாக இருக்கும் இனவெறி மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை பாதுகாத்து மூடிமறைத்துள்ளனர் என்பது தெளிவாகிறது. இந்த அமைப்புகள் தங்களின் பலனை ஆளும் வர்க்கத்திற்கும் மற்றும் பல இனவெறி சமூகவிரோதிகளுக்கும் கொடுப்பதற்காக தீவிரமாக செயல்படுகின்றனர். போலீஸ் மிருகத்தனத்தை எதிர்த்துப் போராடுவதற்கான இயக்கம் தொடர்ந்து விரிவடைந்து வருவதால், வரலாற்றின் வலது பக்கத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் ஆற்றல்களை கட்டவிழ்த்து விடுவதில் போலீஸ் தொழிற்சங்கங்கள் மிகுந்த பிற்போக்குத்தனமான பங்கைக் கொண்டுள்ளன.

இந்த அமைப்புகளைச் சேர்ப்பது முதலாளித்துவ அரசு எந்திரத்தின் மீது பரந்த தொழிலாளர் வர்க்கத்தின் அழுத்தத்தின் சாத்தியமான புள்ளியைக் குறிக்க முடியுமா?

வர்க்கப் போராட்டத்தின் வியத்தகு விரிவாக்கத்தின் போக்கில் இது சந்தேகத்திற்கு இடமின்றி இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, உலகெங்கிலும் உள்ள புரட்சிகர சூழ்நிலைகளின் பின்னணியில் பரந்த வர்க்கப் போராட்டத்தின் அழுத்தத்தின் கீழ் காவல்துறையின் அணிகள் முறிந்துவிட்டன அல்லது ஓரளவு அசையாமல் இருந்தன என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் இங்கு உள்ளன.

ஆனால், மார்க்சிய முறையின் தொடக்கப் புள்ளி வர்க்கப் போராட்டத்தின் வாழ்க்கை யதார்த்தமே ஆகும். அது இப்பொழுது உண்மையில் வெளிவருகிறது, இது சுருக்கமான சூத்திரங்களே.இச்சூத்திரம் நேரம் மற்றும் இடத்தைப் பொருட்படுத்தாமல் ஒரளவு எல்லா நிலைகளிலும் பொருந்தி வருகிறது. ஒரு முனைப்புள்ளி எட்டப்பட்டுள்ளது. தொழிலாளர் வர்க்கத்தின் பிரமாண்டமாக பயன்படுத்தப்படாத திறனை நாம் பயன்படுத்த வேண்டுமானால், தேசிய மற்றும் உள்ளூர் தொழிலாளர் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் இந்த நிறுவனங்களின் கதவைத் திறக்கும் வழியைக் காட்ட வேண்டும்.

எவ்வாறாயினும், போலீஸ் தொழிற்சங்கங்கள் AFL-CIO இலிருந்து வெளியேற்றப்பட்டாலும், அது தொழிலாளர் தலைவர்களின் அலட்சியம் மற்றும் வர்க்க ஒத்துழைப்புக் கொள்கைகளை விட்டுவிடாது. ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னால் தங்களின் மில்லியன் கணக்கான உறுப்பினர்களை முழுமையாக அணிதிரட்ட தங்களின் சக்தியையும் வளங்களையும் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் வெற்று ஒற்றுமையை பற்றி தெளிவான பிரகடனங்களை வெளியிட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவுகளை மீறுவதற்கும், ஆத்திரமூட்டிகள் மற்றும் தீவிர வலதுசாரி போராளிகளிடமிருந்து ஆர்ப்பாட்டங்களை பாதுகாப்பதற்கு தொழிலாளர் வர்க்கத்தின் கடுமையான பட்டாலியன்களுடன் வீதிகளை நிரப்புவதற்கு பதிலாக, அவர்கள் நவம்பர் மாத தேர்தலில் தங்களின் நம்பிக்கைகள் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டனர். நாடு முழுவதும் தற்காப்புக் குழுக்களை விரிவுபடுத்துவதற்கு உதவுவதற்கு பதிலாக, அவர்கள் வன்முறை மற்றும் சொத்துக்களை அழிப்பது பற்றிய சுருக்க கண்டனங்களை வெளியிட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளில் பெரும்பான்மையானவர்கள் யார் என்பதை வெளிப்படையாக சுட்டிக்காட்டாமல் வெற்றிகரமான முழுமையான பொது வேலைநிறுத்தத்திற்கு சிரமமின்றி தயாராகி வருவதற்கு பதிலாக, AFL-CIO தலைவர் ரிச்சர்ட் ட்ரூம்கா “வெறுப்பு சக்திகளை” தீர்மானித்து, “நீதி” என்று அழைக்கிறார்.

இறுதியில் நாம் காண்பது யாதெனில், தொழிலாளர் தலைமை இத்தகைய கோழைத்தனமான மற்றும் செயலற்ற பாத்திரத்தை வகிப்பதற்கான முக்கிய காரணம், அவர்கள் முதலாளித்துவ அமைப்பிற்கு மாற்று அமைப்பை காணவில்லை என்பதும், தொழிலாளர் வர்க்கம் அரசியல் மற்றும் பொருளாதார சக்தியை வென்றெடுப்பதில் முற்றிலும் நம்பிக்கையற்றவர்களாக இருப்பதுமே ஆகும். மறுபுறம், மார்க்சிஸ்டுகள் சமூகத்தை அடிப்படையை மாற்றுவதற்கான தொழிலாளர் வர்க்கத்தின் சக்தியில் முன்னெப்போதையும் விட நம்பிக்கையுடன் நிரப்பப்பட்டிருக்கிறார்கள்.,
ஒரு தொழிலாளர் அரசாங்கம்தான் இனவெறியின் அடிப்படையை அகற்றும் என்று.!

இனவாதமும் வெள்ளை மேலாதிக்கத்தின் பிற்போக்குத்தனமான சித்தாந்தமும் நாடு முறையாக நிறுவப்படுவதற்கு முன்பிருந்தே அமெரிக்காவில் ஒரு வெறுக்கத்தக்க பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்த விஷம் அடிமைத்தனத்தை ஆதரிப்பதற்கும் நியாயப்படுத்துவதற்கும் உணர்வுபூர்வமாக தூண்டப்பட்டது, பின்னர் இது முதலாளித்துவ அமைப்பை ஒட்டுமொத்தமாக பராமரிப்பதற்காக நிலைத்து உருவானது. இதன் அடிப்படையில் நாம் காணும் உண்மை யாதெனில் முதலாளித்துவம் அதன் அஸ்திவாரங்களில் இனவெறியைக் கொண்டுள்ளது. இந்த குப்பைகளை துடைக்க தொழிலாளர் வர்க்கம் தனது சொந்த சக்திகளை மட்டுமே நம்ப முடியும்.

ஒரு வெகுமக்கள் தொழிலாளர் வர்க்க சோசலிசக் கட்சி உருவாகுவது என்பது, வர்க்கப் போராட்டத்தில் ஒரு வரலாற்று பாய்ச்சலைக் குறிக்கும். தொழிலாளர் வர்க்கத்தின் உண்மையான அரசியல் கட்சி இன்னும் பெரிய ஆர்ப்பாட்டங்களை வழிநடத்தும் மற்றும் ஒருங்கிணைக்கும். இது தெருவில் உள்ள தொழிலாளர்களுக்கும், பணியிடங்கள் அல்லது வீடுகளிலிருந்து இயக்கத்தைக் கவனிப்பவர்களுக்கும் சென்றடையும். இது ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்கான கோரிக்கையை ஒரு பொது வேலைநிறுத்தம் போன்ற நடவடிக்கைகளுடன் இணைக்கும். ஒரு வெற்றிகரமான நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கான கட்டமைப்பானது, இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்க நம்பிக்கையையும் ஒற்றுமையையும் உருவாக்கும்.

எவ்வாறாயினும், ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்கான கோரிக்கையும், முதலாளித்துவ காவல்துறையை நீக்கி அதனை தற்காப்புக் குழுக்களை கொண்டு மாற்றுவதற்கான கோரிக்கையும் பெரும்பான்மையினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான பரந்த போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, போலீஸ் வன்முறை மற்றும் அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டம் மிக அடிப்படையான ஜனநாயகக் கோரிக்கையாகும். எவரையும் -துன்புறுத்தப்படுவதற்கோ, சித்திரவதை செய்யப்படுவதற்கோ அல்லது கொலை செய்யப்படுவதற்கோ எவருக்கும் உரிமை கிடையாது.

நேரடி போலீஸ் வன்முறை மூலம் மட்டுமல்லாமல் முதலாளித்துவ அமைப்பு கறுப்பின உயிர்களை எண்ணற்ற வழிகளில் அச்சுறுத்துகிறது. அது ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்களுக்கு வாழ்க்கையை சாத்தியமற்றதாக்குகிறது. அதனால்தான் இயக்கம் சோசலிசத்திற்காக போராட வேண்டும். அதுவே முழு வேலைவாய்ப்பு கொண்ட சமூகத்தை உருவாக்கும். மேலும் வியத்தகு முறையில் குறைவான வேலை வாரத்துடன் கூடிய அதிக ஊதியங்கள் கொண்ட நடைமுறை வேலை திட்டத்தை உருவாக்கும். அனைவருக்கும் தரமான வீடுகள் மற்றும் இலவச உலகளாவிய சுகாதாரம், கல்வி போன்ற பலவற்றை உருவாக்கும்.

ஒரு தொழிலாளர் அரசாங்கம் தொழிற்சங்க ஊதியத்தில், தரமான வீடுகள், பூங்காக்கள், பொழுதுபோக்கு பகுதிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவற்றைக் கட்டியெழுப்ப தேவையான மக்களை பணியமர்த்தக்கூடிய ஒரு பயனுள்ள பொதுப்பணித் திட்டத்தை அதிக வேலையின்மை உள்ள பகுதிகளில் தொடங்கும். ஒவ்வொரு வகை ஊதிய பாகுபாட்டையும் அகற்றவும். இன்று, ஒரு வெள்ளை தொழிலாளி செய்யும் ஒரு டாலருக்கான வேலையை, ஒரு லத்தீன் தொழிலாளி $.90 பைசாவிற்காக செய்கிறான். ஒரு கறுப்பின தொழிலாளி அதனை $ .73 பைசாவிற்காக செய்கிறான். ஒரு வெள்ளை ஆண் தொழிலாளி செய்யும் ஒரு டாலருக்கான வேலையை, ஒரு கருப்பு பெண் தொழிலாளி வெறும் 64 பைசாவிற்காக செய்கிறாள். இது முதலாளித்துவ சமத்துவமின்மை மற்றும் அதன் பிளவு ஆட்சி கொள்கையின் கடினமான நடைமுறைகளுக்கு சான்றுகள் ஆகும்.

கடந்த மூன்று வாரங்களில், நூறாயிரக்கணக்கான துணிச்சலான மிருகத்தனமான போலீஸ் அடக்குமுறை மற்றும் இராணுவத் தலையீட்டின் அச்சுறுத்தலால் ஒரு அசாதாரண இயக்கத்தை நாங்கள் கண்டிருக்கிறோம். உழைக்கும் மக்கள் நகர ஆரம்பித்தவுடன் அவர்களின் மகத்தான சக்தியை இது காட்டுகிறது. அதே சமயம், சமுதாயத்தின் அடிப்படையை மாற்ற வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மட்டும் போதாது என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். இங்கு ஒன்றை நாம் நினைவில் வைக்க வேண்டும். அது யாதெனில் நாம் அரசியல் பிரதிநிதித்துவத்தை கட்டியெழுப்பி நமது சக்தியை உறுதிப்படுத்தாவிட்டால், இயக்கம் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தவிர்க்க முடியாமல் மந்தமடையும்.இதனை சரியாக பயன்படுத்தி
ஆளும் வர்க்கம் எதிர் தாக்குதலுக்குத் துணிந்துவிடும்.

முன்னோக்கி செல்லும் வழி தெளிவாக உள்ளது. தொழிலாளர் வர்க்கத்திற்கு அபரிமிதமான ஆற்றல் உள்ளது. அதனை ஒன்று திரட்டி ஒரு வர்க்கமாக செயல்பட்டால் அடுத்த வரலாற்று காலகட்டத்தில் உலகத்தை தலைகீழாக மாற்ற முடியும். இதன் அடிப்படையிலேயே IMT போராடுகிறது. எங்களுடன் சேர்ந்து, மார்க்சிய கருத்துக்களைக் கொண்ட ஒரு வெகுஜன தொழிலாளர் வர்க்க சோசலிசக் கட்சிக்கு அடித்தளம் அமைக்க எங்களுக்கு உதவுங்கள்!

கொலைகார போலீஸ்காரர்களை எதிர்த்துப் போராட, முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடுங்கள்!
தொழிலாளர் வர்க்க ஒற்றுமைக்கு நாம் நம்முடைய சொந்த பலத்தையும் சொந்த அமைப்பையும் மட்டுமே நம்ப முடியும்! இங்கு ஒருவருக்கு ஏற்படும் காயம் அனைவருக்கும் ஏற்படும் காயத்திற்கு சமம்.
ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பொறுப்புள்ள தற்காப்புக் குழுக்களை எல்லா இடங்களிலும் உருவாக்குங்கள்!
ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்கள் இயக்கத்தில் இணைய வேண்டும், அருகாமை குழுக்களை இணைக்க வசதி செய்ய வேண்டும், பொது வேலைநிறுத்ததிற்கு அழைப்பு விடுக்க வேண்டும், நாட்டை செயல்பட விடாமல் நிறுத்த வேண்டும்!
டிரம்ப், குடியரசுக் கட்சியினர் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் ஒழிக!
முதலாளித்துவ அரசு, போலீஸ் மற்றும் அதன் நிறுவனங்களை மாற்றுவதற்கு ஒரு வெகுஜன தொழிலாளர் வர்க்க சோசலிஸ்ட் கட்சி மற்றும் ஒரு தொழிலாளர் அரசாங்கம் நமக்கு தேவை. !